சிலை மீது ஏறி மாலை போட தடை
சென்னை:அரசு சார்பில் தலைவர்களுக்கு விழா எடுக்கும்போது, தலைவர்களின் சிலை மீது மாலை போடுவதை தமிழக அரசு தடை செய்துள்ளது. அதற்குப்பதிலாக சிலைக்கு அருகே அவர்களின் படங்களை வைத்து அவற்றுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது அரசு சார்பில் மறைந்த தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்டவையின் போது பீடத்தின் அருகே உள்ள படிகளில் ஏறிசிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
அப்போது பலரும் மேலே ஏறுவதால் பீடத்திற்கும், படிக்கட்டுக்களுக்கும் சேதம் ஏற்படுகிறது. மேலும், சிலையின் முகம் முற்றிலும் மறையும்அளவுக்கு மாலைகளும் போட்டு நிரப்பப்படுகின்றன.
இதைத் தடுக்க மாலை போடும் முறையில் மாற்றம் செய்ய அரசுக்கு கோரிக்கை வந்தது. டெல்லியில் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதைசெய்யும்போது சிலைக்குக் கீழே படங்களை வைத்து அவற்றுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது.
அதே போன்ற நடை.றையை தமிழகத்திலும் மாநில அரசு அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஒரு உத்தரவில்,மறைந்த தலைவர்களின் சிலை அருகே படம் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications