திருப்பதியில் சாமியார் தலை துண்டித்துக் கொலை
திருப்பதி:திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நாத்ஜி அபோரிபாபா என்ற சாமியார் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
வெங்கடாசலபதி கோவில் அருகே உள்ள தும்புரா தீர்த்தக் குளம் அருகே கடந்த 15ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வந்தவர் அபோரிபாபாசாமியார்.
திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரையும் தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாபாவை தரிசிக்கநீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பது வழக்கம்.
இந்த நிலையில் பாபா சாமியார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தனது குடிலில் பிணமாகக் கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.
பாபாவுக்கு 30க்கும் மேற்பட்ட சிஷ்யர்கள் உண்டு. பாபா அதிக அளவில் நகைகளை அணிவது வழக்கம். மேலும் பக்தர்கள் கொடுக்கும் பணமும்கட்டுக் கட்டாக அவரிடம் இருக்கும். இதுதவிர தங்க, வெள்ளிப் பாத்திரங்களும் நிறைய இருந்தன.
பாபாவுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கமும் இருந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சில வாலிபர்கள் பாபா சாமியாரிடம் வந்து பேசினர்.அப்போது கஞ்சாவையும் கொடுத்து விட்டுச் சென்றனர். அதன் பின்னர் பாபா சாமியார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே அந்த நான்கு வாலிபர்கள்தான் கொலைக்குக் காரணமாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications