விபச்சாரம்-நடிகை, மருத்துவ மாணவி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து விபச்சாரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பல் மருத்துவ மாணவியை போலீஸார் கைதுசெய்தனர். அவரோடு துணை நடிகை ஒருவரும் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

சென்னையில் விபச்சாரத் தடுப்புப் போலீஸார் திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதில் பெரிய பெரிய திமிங்கலங்களும், சிறுசிறு மீன்களும் சிக்கி வருகின்றனர்.

விருகம்பாக்கம் கம்பர் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் விபச்சாரம் மற்றும் ஆபாசப் படம் பிடிப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது.

குறிப்பிட்ட வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது அங்கு சுனிதா மற்றும் சாந்தி ஆகிய இரு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததுதெரிய வந்தது. இவர்களில் சுனிதா பெங்களூரைச் சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம்படித்து வருகிறார்.

தற்போது ஹவுஸ் சர்ஜனாக உள்ள அவர் மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபடுவாராம். பின்னர் மணிப்பால் சென்றுவிடுவாராம். ஆடம்பரமாக செலவழிக்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகபோலீஸாரிடம் சுனிதா தெரிவித்தார்.

தற்போது போலீஸில் பிடிபட்டு விட்டதால், இனிமேல் விபச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று கண்ணீர் மல்க போலீஸாரிடம் தெரிவித்தார் சுனிதா.நேற்று போலீஸாரிடம் சுனிதா பிடிபட்டபோது அவருடன் மயிலாப்பூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உல்லாசமாக இருந்தார். அவர் ஒருதொழிலதிபராம். சுனிதாவிடம் சந்தோஷமாகஇருப்பதற்காக 5,000 ரூபாய் பணம் கொடுத்திருந்தாராம் ரங்கராஜன்.

சுனிதாவுடன் இருந்த பெண்ணான சாந்தி துணை நடிகை ஆவார். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். சினிமாவில் சரியானசம்பளம் கிடைக்காததால் சைடில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

கணவருக்கு தான் செய்யும் விபச்சாரத் தொழில் தெரியாது என்றும் தயவு செய்து சொல்லி விடாதீர்கள் என்றும் அவர் போலீஸாரிடம் கெஞ்சினார்.இவர்தான் சுனிதாவுக்கு பார்ட்டிகளைப் பிடித்துக் கொடுப்பாராம்.

இவர்கள் இருவரையும் ஏற்பாடு செய்த பெண் புரோக்கர் ராதாவையும் போலீஸார் கைது செய்தனர். விபச்சாரம் நடந்த இடத்தில் ஏராளமானசினிமா புள்ளிகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

விருகம்பாக்கத்தில் உள்ள பல பங்களாக்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பது அனைவருக்கும் தெரிந்தவிஷயம். இப்பகுதியில் தொடர்ந்து விபச்சார வேட்டை நடைபெறும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+