திருப்பூரில் விநாயகர் கோவில் இடிப்பு:இ. முன்னணி போராட்டம்-பஸ்கள் மீது கல்வீச்சு
திருப்பூர்:திருப்பூரில் சாலையோரம் இருந்த விநாயகர் கோவில் சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர்போராட்டம் நடத்தினர். பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
திருப்பூர்-அவிநாசி சாலை போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதி. இந்த சாலை ரூ. 1 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக சாலையோரஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இதுதொடர்பாக நோட்டீஸ்கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து சோளிபாளையம் வரையிலான பகுதியில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ்பாதுகாப்புடன் தொடங்கியது. அப்போது அவிநாசி ரோட்டில் அனுப்பாளையம் புதூர் அருகே சாலையோரம் இருந்த செல்வ விநாயகர் கோயில்இடிக்கப்பட்டது.
இதற்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜக நகர பொதுச் செயலாளர் சிவகுமார், இந்து முன்னணியை சேர்ந்த நவநீதன், குமார்,செந்தில் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கல்வீச்சில் குதித்தனர். அந்த வழியாக சென்ற பேருந்துகள் மீது கல்வீசித் தாக்கியதில்பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. தாக்குதலில் 12 பேருந்துகள் சேதமடைந்தன. கல்வீச்சில் ஒரு பள்ளி மாணவி மற்றும் டிரைவர் காயம்அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்வீச்சு நடத்திய பாப்பண்ணன் (23), ராஜன் (20), அருண்குமார் (21), பாலசுப்பிரமணியன் (43),வேளாங்கண்ணி (21), ராமாத்தாள் (38) ஆகியோரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications