செக்ஸ் ஆட்டம் ஆடிய டென்னிஸ் கோச்!
சென்னை:டென்னிஸ் பயிற்சி தருவதாக கூறி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த டென்னிஸ் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவிகொடுத்த வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை முயற்சிப் புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள பாலவாக்கம் விஜிபி லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் தீபா நடராஜன். 30 வயதாகும் இவர் சாப்ட்வேர் என்ஜீனியர்ஆவார். இவரது கணவர் பெயர் சுரேஷ். இவர் ஒரு டென்னிஸ் பயிற்சியாளர். இருவருக்கும் கடந்த 2000மாவது ஆண்டு காதல் திருமணம்நடந்தது. 2004ல் பெண் குழந்தை பிறந்தது.
![]() |
இவர்களது வீட்டில் மேல் தளத்தில் சுரேஷும், தீபாவும், கீழ் தளத்தில் தீபாவின் பெற்றோரும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுரேஷ் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் இன்று தீபா பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்தார்.இதுகுறித்து தீபா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1997-98ல் நான் சுரேஷிடம் டென்னிஸ் பயிற்சி பெற்றேன். அப்போது எங்களுக்குள்காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம்.
ஆனால் கல்யாணமான சில நாட்களிலேயே அவரது நிஜ முகம் எனக்குத் தெரிய வந்தது. டென்னிஸ் பயிற்சிக்காக அவர் அடிக்கடிவெளிநாடுகளுக்குச் செல்வார். அப்போது பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது எனக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து நான் கேட்டபோது அவர் என்னை கடுமையாகத் திட்டினார். அத்தோடு இல்லாமல், பெண்களை வீட்டுக்கே கூட்டி வர ஆரம்பித்தார்.தன்னிடம் பயிற்சி பெற வரும் பெண்கள் மற்றும் அவர்களுடன் வரும் பெண்களிடம் அவர் பாலியல் தொடர்பு வைத்திருந்தார்.
இதை விட மோசமாக விபச்சாரப் பெண்களையும் வீட்டுக்குக் கூட்டி வந்து சல்லாபம் செய்ய ஆரம்பித்தார். இதை நான் கடுமையாகஆட்சேபித்தபோது என்னை தாறுமாறாக போட்டு அடித்தார்.
என் முன்பு மட்டுமல்லாமல், எனது பெற்றோர், குழந்தை முன்பும் அவர் தகாத உறவில் ஈடுபட முயன்றார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். 2006ல் விவாகரத்து கோரி மனு செய்தேன்.
![]() |
ஆனால் அவர் எனது வீட்டை விட்டு வெளியேற மறுத்து விட்டார். நான் போக வேண்டுமானால் 20 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றுமிரட்டினார். மேலும், என்னைத் தொல்லை செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.
எனக்கு முன்பே நிகிலா என்ற பெண்ணையும் அவர் கல்யாணம் செய்து கொண்டு பின்னர் பணம் வாங்கிக் கொண்டு விவகாரத்து செய்துள்ளார்.இதுபோல பல பெண்களை அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார் தீபா.
சுரேஷ் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திலும் தீபா புகார் கொடுத்திருந்தார். அதன் பேரில் போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர். கொலைமுயற்சி, குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணை கேட்டு துன்புறுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
![]() |
சுரேஷின் செக்ஸ் லீலைகள்:
சுரேஷ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களையும் தீபா வெளியிட்டள்ளார். தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகள் யாரையும் விடுவதில்லையாம்சுரேஷ். பள்ளி மாணவி முதல் பயிற்சிக்கு கூட வரும் பெண்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லையாம்.
அவர்களிடம் நைச்சியமாகப் பேசி தனது வலையில் வீழ்த்தி அவர்களுக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பாராம். பின்னர் அவர்களுடன்உல்லாசமாக இருப்பாராம். உல்லாசத்திற்கு எங்கும் போவதில்லை, தனது வீட்டுக்கே பெண்களை அழைத்துக் கொண்டு வந்து விடுவாராம்.
முன்பு மனைவி இல்லாத சமயங்களில் மட்டும் இவ்வாறு கூத்தடித்து வந்துள்ளார். ஆனால் தீபாவுக்கு விஷயம் தெரிந்த பின்னர் தைரியமாக கூட்டிவர ஆரம்பித்தாராம்.
ஒரே நேரத்தில் பல பெண்களுடன் கூத்தடிக்கும் குரூப் செக்ஸிலும் ஈடுபட்டு தனது வக்கிரத்தைக் காட்டியுள்ளார் சுரேஷ். இதைத் தட்டிக் கேட்டதீபாவை கடுமையாக அடித்துள்ளார். இதில் தீபாவின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சுரேஷ் கைது செய்யப்பட்டதற்கு லத்திகா சரணை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் தீபா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications