இந்திய அணிக்கு கமாண்டோ பாதுகாப்பு!
டெல்லி:மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி வருகிற 13ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இதற்காக ராகுல் டிராவிட் தலைமையிலானஇந்திய கிரிக்கெட் அணி அங்கு சென்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சில வீரர்களுக்கு லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் கொலை மிரட்டல் உள்ளது. இந்தநிலையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு வந்துள்ள இந்திய அணிக்கு விசேஷ பாதுகாப்பு அளிக்க இயலாத நிலையில் உள்ளதாக மேற்கு இந்தியதீவுகள் நிர்வாகம் மத்திய அரசிடம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படை (கருப்புப் பூனை) பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றுபாதுகாப்புப் பணிகளை பார்வையிடவுள்ளது.
மேலும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அழிக்கும் சிறப்புப் படை வீரர்கள் குழுவும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்லவுள்ளது.
வெளிநாடு செல்லும் இந்திய விளையாட்டு அணி ஒன்றுக்கு கருப்புப் பூனைப் பாதுகாப்பு தரப்படுவது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications