பெங்களூர் தியேட்டர் மீது கன்னடர்கள் தாக்குதல்
பெங்களூர்:பெங்களூரில் தமிழ்ப் படம் திரையிட்ட தியேட்டரில் புகுந்து கன்னட வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். படச் சுருளையும் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டனர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்ட சில கன்னட அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள் செய்யும் அலும்புஇன்னும் கர்நாடகத்தில் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பெங்களூர் உள்ளிட்ட பல ஊர்களில் தமிழ் சானல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் தமிழ்ப் படங்களை போட விடமாட்டோம் என பிடிவாதமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பெங்களூர் கத்ரி குப்பே என்ற பகுதியில் உள்ள சவுடேஸ்வரி தியேட்டரில் தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படம்திரையிடப்பட்டிருந்தது.
நேற்று படம் ஓடிக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு கும்பல் வந்தது. தியேட்டருக்குள் வந்த அவர்கள் அங்கு ஓட்டப்பட்டிருந்த போஸ்டர்களைகிழித்து எறிந்தனர். பின்னர் ஆபரேட்டர் அறைக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த படச் சுருளை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இந்த களேபரத்தால் பயந்து போன தியேட்டர் ஊழியர்கள் தமிழ் படத்தை நிறுத்தி விட்டு இத்துப் போன ஒரு கன்னடப் படத்தைப் போட்டுரகளையாளர்களை சமாதானப்படுத்தி, தியேட்டரைக் காத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications