சிவகாசி ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சிவகாசி ஜெயலட்சுமிக்கு தாராபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
![]() |
ஈரோடு மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் சண்முக ராஜு. இவரிடம் கடந்த 2005ம் ஆண்டு சிவகாசி ஜெயலட்சுமி ரூ. 2 லட்சம் பணம் கடனாக வாங்கியிருந்தார். இந்தப்பணத்தைத் திருப்பிச் செலுத்த காசோலைகளை கொடுத்திருந்தார்.
இவற்றை வங்கியில் போட்டபோது, ஜெயலட்சுமி வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து ஜெயலட்சுமி மீது தாராபுரம் கோர்ட்டில்வழக்கு தொடர்ந்தார் சண்முகராஜு. இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜெயலட்சுமி வரவில்லை.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜெயலட்சுமி வராததால் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications