இன்டர்நெட்டைக் கலக்கும் மோசடி லாட்டரிகள்!
சென்னை:பல கோடி பம்பர் பரிசு அடித்துள்ளதாக கூறி இன்டர்நெட் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வரும் லாட்டரி மோசடியில் சிக்கி பலரும் பணத்தைஇழந்து வரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சேலம், சூரமங்கலதைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் பாலாஜி. இன்டர்நெட்டில் அடிக்கடி உலவும் இவர், பிசிஏ படித்து வருகிறார். தினசரிமாலையில், கல்லூரி முடிந்தவுடன் பிரவுசிங் சென்டருக்குப்போய் விடுவார்.
ஒருமுறை, இணைய தளம் ஒன்றுக்குச் சென்ற பாலாஜி, அதில், லக்கி பிரைஸ் என்ற பகுதியைப் பார்த்து அதை கிளிக்கினார். உள்ளே போய்பார்த்தபோது, பெயர், முகவரி, ஈமெயில் ஐடி உள்ளிட்டவற்றை அது கேட்டது. எல்லாம் கொடுத்த பின்னர் கிளிக் டூ வின் என்ற வாசகம் வந்தது.அவரும் கிளிக்கினார். உடனே 60 வகையான எண்கள் வந்தன. அதில் 6 எண்களைத் தேர்வு செய்து அனுப்புமாறு செய்தி வந்தது.
அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு பல கோடி பரிசு கிடைக்கும் என்ற அந்த செய்தி கூறியதால், ஆஹாஹா என்று அசந்து போன பாலாஜி, தேர்வுசெய்து அனுப்பினர். அடுத்த நிமிடமே, உங்களுக்கு 1 மில்லியன் டாலர் (சுமார் 4 கோடி பரிசு) பரிசு கிடைத்துள்ளது, வாழ்த்துக்கள் என்ற செய்திவந்தது.
இதைப் பார்த்து அதிர்ந்து போனார் பாலாஜி. நமக்கு 4 கோடி பரிசா என்று வியந்து போன அவர் வீட்டுக்கு ஓடி தகவலைக் கூறி சந்தோஷத்தில்மூழ்கினார். உடனே போய் பணத்தை வாங்கிடு என்று வீட்டினர் கூறியதால், அந்த இணையதளத்தைத் தொடர்பு கொண்டு பணத்தைப் பெறும் வழிகுறித்து கேட்டார்.
ஒரு எண்ணைக் கொடுத்து அதில் பேசுமாறு பதில் வந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார் பாலாஜி. ரூ. 80 ஆயிரம் பணம்அனுப்புமாறும், அப்பணம் வந்ததும் உங்களுக்குரிய பரிசுத் தொகை கைக்கு வந்து சேரும் என்றும் மறு முனையில் பேசியவர் தெரிவித்தார்.
அதற்கு பாலாஜி, எனது பரிசுப் பணத்தில் கழித்துக் கொண்டு மீதத் தொகையைத் தருமாறு திருவிளையாடல் தருமி மாதிரி கேட்டார். ஆனால்அவர்களோ, அது எப்படி முடியும்? லாட்டரிச் சீட்டை காசு கொடுத்து வாங்கிய பிறகுதானே பரிசே கிடைக்கும். அதுமாதிரிதான் இதுவும் என்றுகூறியுள்ளனர்.
மேலும் நேரில் வந்தால் உங்களுக்கு இரண்டே நாளில் பணம் கிடைத்து விடும் என்றும் கூறியுள்ளனர். 4 கோடியை விட மனமில்லாத பாலாஜிஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்குப் போய் பணத்தை வாங்கி விட முடிவு செய்தார்.
இதையடுத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியபோது தான் இந்த லாட்டரிப் பரிசு ஒரு மோசடி செயல் என பாலாஜிக்குத் தெரிய வந்தது.அத்தோடு ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டார். தலைக்கு வந்தது ஹெல்மட்டோடு போனது என்று நினைத்து வாஷிங்டனையும், அந்தஇணைய தள லாட்டரியையும் அப்போதே மறந்து விட்டாராம்.
இதேபோல பலரையும் இந்த இணைய தள லாட்டரிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனவாம்.
இதேபோல, அதே சூரமங்கலதைத் சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கு ஹாலந்தில் உள்ள ஒரு லாட்டரிச் சீட்டு நிறுவனம் பம்பர் பரிசுவிழுந்திருக்கிறது, பணம் அனுப்பி வாங்கிக் கொள்ளுங்கள் என்று வலை விரித்துள்ளது. கடைசி நேரத்தில் தப்பியுள்ளார் பிரேம்குமார்.
இவர்கள் பரவாயில்லை, கோவை ரத்தினகிரியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரின் தம்பி மகள் இதுபோன்ற மோசடி லாட்டரியை நம்பி ரூ. 20ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்து ஏமாந்துள்ளார். ஹரிகிருஷ்ணனின் மகளுக்கும் இதுபோல ஒரு ஏமாற்று வலை விரிக்கப்பட்டுள்ளது. ஆனால்அவர் உஷாராகி விட்டதால் தப்பினார்.
அடிக்கடி இணைய தளங்களுக்குச் செல்லும் இளைஞர்கள், மாணவ, மாணவியரைக் குறி வைத்தே இந்த இணைய தள லாட்டரி மூலம் பணத்தைக்கறக்கிறது மோசடிக் கும்பல்.
எனவே இதுபோன்ற மோசடி இணைய தளங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications