திடீர் கடல் கொந்தளிப்பு-கிராமங்களுக்குள் நீர்குமரி மீனவர்கள் பீதி-மீன்பிடி தொழில் பாதிப்பு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதி கிராமங்களில் நேற்று மாலை கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகஅளவில் இருப்பதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். சில கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கும> மாவட்டம் கீழ மணல்குடி, மேல மணல்குடி, கொல்லங்கோடு, வல்லம்விளை உள்ளிட்ட கிராமங்களில்நேற்று மாலை முதல் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்லவில்லை.
தொடர்ந்து 2வது நாளாக இன்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கீழ மணல்குடி, மேலமணல்குடி கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கடல் நீர் உள்ளே புகுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளும் சேதமடைந்துள்ளன. இதனால்மீனவர்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். மீன் பிடி தொழில் 2வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
சில கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications