நெல்லை: தமுமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு
திருநெல்வேலி:தென்காசியில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக பிரமுகரை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன்சேட் கான் (40). தென்காசி அம்மன் சன்னதி அருகே நேற்றிரவு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் வந்து மைதீன்சேட் கானை வழிமறித்து சரமாரியாகஅரிவாளால் வெட்டியது. இதில் மைதீன்சேட் படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
காயமடைந்த மைதீன்சேட் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளைங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை நடத்தி வருகிறார்கள்.
மைதீன்சேட் கான் வெட்டப்பட்டதை தொடர்ந்து தென்காசியில் பெரும் கலவர சூழல் நிலவுகிறது. நகரில் பெரும்பாலான கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவு பேருந்தை ஒரு கும்பல் வழிமறித்து கற்கள்வீசியது. இதைத் தொடர்ந்து தென்காசியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஸ் மீது கல் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தென்காசிக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும்ஆட்டோக்களும் ஓடவில்லை.
சமீபத்தில் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக இருந்த குமார் பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமுமுக பிரமுகர் வெட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications