ஆசிரியை சல்வார் அணிவது தப்பா?
சென்னை:சல்வார் கமீஸ் உடையில் பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வந்த ஆசிரியையை, தேர்வு மையப் பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டிஅனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னை டிஏவி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சித்ரா. இவருக்கு தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள குண்டூர்சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புப் பணிக்காக சித்ரா சென்றார். சல்வார் கமீஸ் உடையில் அவர் இருந்தார். அவரைப்பார்த்ததும் சுப்பையா பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி சித்ராவை தடுத்து நிறுத்தினார்.
எங்களது பள்ளி வளாகத்திற்குள் யாரும் சல்வார் கமீஸ் உடையில் வரக் கூடாது. இது பள்ளி விதி. எனவே இந்த உடையில் உங்களை அனுமதிக்கமுடியாது என்று கோபமாக கூறினார்.
இதற்கு சித்ரா விளக்கம் அளிக்க முயன்றபோது அதை ஏற்க மறுத்த கிருஷ்ணகுமாரி, சல்வார் உடையில் நீங்கள் வந்தால் மாணவி யார், ஆசிரியையார் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? வேறு உடையில் வருவதாக இருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் உங்களை பணியாற்ற அனுமதிக்கமுடியாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் கிருஷ்ணகுமாரி இவ்வாறு கூறியதால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் சித்ரா. தனது நிலையில்பிடிவாதமாக இருந்த கிருஷ்ணகுமாரி, சித்ராவை தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கவே இல்லை.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகுமாரியிடம் கேட்டபோது, எங்களது பள்ளி விதிப்படி,ஆசிரியைகள் யாரும் சல்வார் கமீஸ், சுடிதார் அணிந்து வரக் கூடாது. பிறகு மாணவிக்கும், ஆசிரியைக்கும் எப்படி வித்தியாசம் காண முடியும்.?
மேலும் பிளஸ் டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வரும் ஒரு ஆசிரியை சல்வார் கமீஸ் உடையில் வருவது நன்றாகவா இருக்கிறது? தனக்கு தமிழ்தெரியாது என்றும் சித்ரா கூறினார். தமிழ் தெரியாத கண்காணிப்பாளரை தமிழ் தேர்வைக் கண்காணிக்க எப்படி அனுமதிக்க முடியும்.அதனால்தான் அவரை திருப்பி அனுப்பினோம். மற்றபடி அவரை நாங்கள்அவமானப்படுத்தவில்லை என்றார் கிருஷ்ணகுமாரி.
இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications