யோபு சொத்துக்களை விற்க போலீஸ் திட்டம்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனின் சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு, அவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களுக்குபணத்தை திருப்பி அளிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
சர்வதேச கல்வாரி மிஷன் என்ற பெயரில் வேலூர் மற்றும் சென்னையில் அலுவலகம் திறந்த யோபு சரவணன், ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளி ராஜேந்திரனும் கைது செய்யப்பட்டார்.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தி யோபு சரவணனுக்கு சொந்தமான கோவில்பட்டியில் உள்ள 175 ஏக்கர் நிலத்தை கண்டுபிடித்தனர். மேலும் 11சொகுசு கார்கள் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரில் உள்ள அவரது சொத்துக்கள்முடக்கப்பட்டன.
கோவில்பட்டியில் உள்ள 175 ஏக்கர் நிலம் மற்றும் எண்ணூரில் உள்ள அவரது 2 வீடுகள் ஆகியவற்றை முடக்குவதற்கு சிபிசிஐடி போலீசார்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
யோபு மற்றும் அவரது கூட்டாளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 15 கார்களையும் ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேபோல அவருடைய பிற சொத்துக்களையும் விற்று, அதன் மூலம் வரும் பணத்தை யோபுவிடம் ஏமாந்த கட்டிட கான்டிராக்டர்களுக்கு திரும்பிஅளிப்பது பற்றியும் சிபிசிஐடி போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications