ஷேவாக் சேர்ப்பு ஏன்? வெங்ஸ் போடும் வெடி
டெல்லி:உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், திறமை காரணமாக வீரேந்திர ஷேவாக் சேர்க்கப்படவில்லை. கேப்டன் ராகுல் டிராவிட் வேண்டிக்கேட்டுக் கொண்டதால்தான் அவரை அணியில் சேர்த்தோம் என்று இந்திய கிரிக்கெட் அணிதேர்வுக் குழுத் தலைவர் திலீப் வெங் சர்க்கார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பலரும் எதிர்பார்த்த இளம் வீரர்களுக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. ஆனால் சுத்தமாக ஃபார்மில் இல்லாத ஷேவாக் அணியில் சேர்க்கப்பட்டார்.இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பேட்டிங் ஃபார்ம் சுத்தமாக இல்லாத நிலையில் ஷேவாக் சேர்க்கப்பட்டது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ஷேவாக்சேர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்து வெங் சர்க்கார் புதிய தகவலை வெளியிட்டு புது சர்ச்சையைஏற்படுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளார் வெங்சர்க்கார். பேட்டியின்போது வெங் சர்க்கார்கூறுகையில், ஷேவாக்கை அணியில் சேர்ப்பதில்லை என்ற முடிவில்தான் முதலில்இருந்தோம். ஆனால் கேப்டன் ராகுல் டிராவிட்தான், ஷேவாக் கண்டிப்பாக வேண்டும் என்று கோரினார். இதையடுத்து டிராவிட் கோரிக்கைக்காகஷேவாக்கை அணியில் சேர்க்க முடிவு செய்தோம்.
கேப்டன் விருப்பத்தை நான் எப்போதும் புறக்கணிப்பதில்லை. நான் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, எனக்கு விருப்பமான அணிஎனக்கு கொடுக்கப்படவில்லை. அதே நிலை டிராவிட்டுக்கு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. ஷேவாக்கை அவர் கேட்டார், நானும் அதைஏற்றுக் கொண்டேன்.
ஷேவாக்கின் திறமையை வைத்து அவருக்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் அணியில் சிலரது ஆதரவை அவர்பெற்றுள்ளதால், அணியில் இடம் பெறும் நிலை ஏற்பட்டது.
ஷேவாக் அணியில் இருப்பது ஒரு ரிஸ்க்கான விளையாட்டுதான். இருப்பினும் கடந்த காலங்களில் அவர் செய்த சாதனைகளை மறந்து விடமுடியாது. இந்தியாவுக்காக அவர் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடுவார்என நம்புவோம்.
அணியில் இளம் வீரர்கள் இருப்பது மிகவும் முக்கியமானது. அதேசமயம் வெற்றியும் நமக்கு அவசியம். அதற்கு அனுபவசாலிகளும் அவசியம்தேவை.
ஷேவாக்கைப் போலத்தான் இர்பான் பதானும். இருவரும் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்கள்தான். அணியின் வெற்றிக்காக பெரும்பங்காற்றியவர்கள். இருப்பினும் ஃபார்ம்தான் இருவரது பிரச்சினையாகவும் உள்ளது.
இப்போது இருவரும் ஃபார்மில் இல்லாவிட்டாலும் கூட அனுபவம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது. கடுமையான போட்டிகளின் போதுஅனுபவத்தால் வெற்றி காண முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்று கூறியுள்ளார்வெங் சர்க்கார்.
வெங்சர்க்காரின் இந்தப் பேட்டி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஷேவாக் ஃபார்மில் இல்லை, இருந்தாலும் டிராவிட்மற்றும் சில வீரர்களின் வலியுறுத்தல் காரணமாகவே அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் வெங்சர்க்கார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications