கைகட்டியைக் கலக்கிய முதலை!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி மாவட்டம் பூலாம்பாடி அருகே உள்ள கைகட்டி என்ற கிராமத்தில், கால்வாயில் முதலை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பூலாம்பாடி அருகே உள்ள கைகட்டி கிராமத்தில் உள்ள வாய்க்கால் கரையோரம் ஒரு முதலை இருப்பதைப் பார்த்த அந்தக் கிராமத்து மக்கள்பீதியடைந்தனர்.
முதலை வந்துள்ள தகவல் பரவியும் ஊரே கூடி விட்டது. முதலை வந்துள்ளது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும்,முதலையைப் பிடிக்க கிராமத்தினரே களத்தில் குதித்தனர்.
கைகட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இரு வாலிபர்களும் சேர்ந்து துணிச்சலாக முதலையைப் பிடித்து அதன் வாயைக்கட்டினர். பின்னர் வனத்துறையினர் வந்ததும் அவர்களிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது.
அந்த முதலை பின்னர் தஞ்சை மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிளிக்கூடு முதலைப் பண்ணையில் கொண்டு போய் விடப்பட்டது.












Click it and Unblock the Notifications