ஃபீஸ் கட்ட தாமதம்: எல்.கே.ஜி. சிறுமிக்கு தனியார் பள்ளி கொடுத்த கொடூர தண்டனை!
கடலூர்:பள்ளிக் கூட கட்டணத்தை உரிய நேரத்தில் கட்டத் தவறியதற்காக எல்.கே.ஜி. சிறுமியையும், 2வது வகுப்பு படிக்கும் அவளது அண்ணனையும்கடும் வெயிலில் காலை முதல் மாலை வரை முழங்காலிட வைத்து கொடுமைப்படுத்தியதாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்ததனியார் பள்ளி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கூட மாணவ, மாணவியர் ஒழுங்கீனமாக நடந்தால் அவர்களை உடல் ரீதியாக தண்டிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு முரணாக, எல்.கே.ஜி. படிக்கும் சிறுமியையும், 2வது வகுப்பு படிக்கும் அவளது அண்ணனையும் விருத்தாச்சலத்தைச்சேர்ந்த ஒரு பள்ளிக்கூடம் மிகக் கடுமையாக தண்டித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாத்ச்சலம் அருகே உள்ள சட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வெற்றிவேல், மகள் ஈஸ்வரி. டாக்டர்ஒருவரிடம் கம்பவுண்டராக வேலை பார்த்தது வருகிறார் வெங்கடேசன். மிக சொற்ப சம்பளமே வாங்கும் அவர் தனது இரு குழந்தைகளையும்விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
அங்கு ஆண்டுதோறும் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்என்பதற்காக சிரமம் பார்க்காமல் படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாத பள்ளிக் கட்டணத்தை உரிய நேரத்தில் அவரால் கட்ட முடியவில்லை. சற்று அவகாசம் தருமாறு பள்ளி நிர்வாகத்திடம்அவர் கோரியிருந்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த பள்ளி நிர்வாகம் கடந்த 15 நாட்களாக ஈஸ்வரியையும், வெற்றிவேலையும் மிகக் கொடுமையாக தண்டித்துவந்துள்ளது.
இருவரையும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் முழங்காலிட வைத்துள்ளனர் அந்த கொடூர பள்ளி நிர்வாகிகள். இதைஅறிந்த வெங்கடேசன் கோபமடைந்து பள்ளிக்கூடத்திற்குப் போய், இப்படிக் குழந்தைகளைத் தண்டித்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கேட்ட பள்ளி நிர்வாகமோ, செத்தால் செத்து தொலையேன் என்று திமிராக கூறியுள்ளது. மீண்டும் மீண்டும் கட்டணத்தைக்கட்டினால்தான் தண்டனையிலிருந்து தப்ப முடியும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலும் இந்த கொடூரர்களை பேசித் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்த வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம்புகார் கொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் இன்று புகார் கொடுத்தார்.
விருத்தாச்சலம் பள்ளியின் இந்த கொடூரச் செயல், கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications