குழந்தைகளுடன் கலாம் ஹோலி கொண்டாட்டம்
டெல்லி:ஹோலி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஹோலிகொண்டாடினார். அதேசமயம், பிரதமர் மன்மோகன் சிங் ஹோலி கொண்டாட்டத்தில்பங்கேற்கவில்லை.
நேற்று இந்தியாவின் வட பகுதிகளில் ஹோலி சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் ஹோலி கொண்டாட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், அவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள், கலாமுடன் ஹோலிகொண்டாடினர்.
பல்வேறு பாடல்களுக்கு அவர்கள் நடனமாடி கலாமை மகிழ்வித்தனர். தான் எழுதிய கவிதை அடங்கிய வாழ்த்து அட்டைகளை அவர்களுக்குவழங்கினார்.
ரோஜாப் பூக்களின் பின்னணியில் அமைந்திருந்த அந்த வாழ்த்து அட்டையில்,
அழகான இந்த ஹோலி தினத்தில், மணம் வீச, நாம் அனைவரும் இணைந்து மலர்ந்தோம் என்று எழுதப்பட்டிருந்தது.
வழக்கம் போல குழந்தைகளுக்கு அறிவுரை கூறவும் கலாம் மறக்கவில்லை. குழந்தைகளிடம் அவர் பேசுகையில், நீங்கள் ஐந்து விஷயங்களைமறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உடல் நலம் இல்லாமல் இருக்கும் அண்டை அயலாரைப் பார்த்து அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து நலம் பெற வாழ்த்த வேண்டும்.
மருத்துவமனைகளுக்கு சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இனிப்பு கொடுத்து ஆறுதல் கூற வேண்டும்.
பார்வையற்றவர்களை சாலையில் பார்த்தால் அவர்கள் சாலையைக் கடக்க உதவ வேண்டும். அல்லது அவர்களுக்குத் தேவையான உதவியைகேட்டுச் செய்ய வேண்டும்.
உங்களுக்கு நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்களுடன் ஊடல் கொண்டிருந்தால் அல்லது நீண்ட காலமாக தொடர்புகொள்ளாமல் இருந்தால் நீங்களாகவே அவர்களுடன் பேச வேண்டும் அல்லது நேரில் சந்திக்க வேண்டும்.
எதையும் புன்னகையுடன் அணுக வேண்டும் என்று கலாம் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி களை கட்டியிருந்த அதே வேளையில் பிரதமர் மன்மோகன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை.இதற்கு என்ன காரணம் என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை. ஹோலியைபிரதமர் கொண்டாடாவிட்டாலும் கூட அமைச்சர்கள், பிரமுகர்கள் பிரதமரை சந்தித்து ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications