இன்ஸ்பெக்டர் வீட்டில் அதிரடி ரெய்டு
சென்னை:விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதியின் சென்னை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பலமணி நேரம் சோதனை நடத்தி லட்சக்கணக்கான சொத்துக்கள் குறித்த ஆவணங்களைப் பறிமுதல்செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பசுபதி. இவர் வருமானத்துக்கு மீறிய வகையில் பலலட்சம் மதிப்புள்ள சொத்துக்களை குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை போரூரில் உள்ள பசுபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கினர். பல மணி நேரம்நடந்த இந்த சோதனையில், ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் சிக்கின. இவை அனைத்துமே கணக்கில் வராதசொத்துக்கள் ஆகும்.
இதுதவிர ரூ. 3.5 லட்சம் ரொக்கப் பணம், 45 பவுன் தங்க நகைகள், 2 சொகுசு கார்கள், ரூ. 24 லட்சத்திற்கான வங்கிக் கணக்கு ஆகியவையும்சிக்கின.
போரூர் பகுதியில் பசுபதிக்குச் சொந்தமாக ஒரு மூன்று மாடி வணிக வளாகமும் இருப்பது சோதனையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications