பழைய சோறு சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி விடுதியில் பழைய சோறும், ஊறுகாயும் சாப்பிட்ட 50 மாணவ, மாணவியர் வாந்தி எடுத்துமயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் விடுதியில், 150க்கும் மேற்பட்ட வெளியூர் மாணவ,மாணவியர் தங்கிப் படிக்கின்றனர்.

இந்த மாணவ, மாணவியருக்கு தினசரி காலை பழைய சோறும், ஊறுகாயும்தான் சாப்பாடாக வழங்கப்படுமாம். இதை சாப்பிட்டு விட்டு அவர்கள்பள்ளிக்குப் போய் படிக்க வேண்டும்.

நேற்றும் இதுபோல காலையில் பழைய சோறும், ஊறுகாயும் கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்குவாந்தி வந்துள்ளது, சிலர் மயக்கமடைந்து விழுந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ந்து போன விடுதி ஊழியர்கள் உடனடியாக மாணவ, மாணவியரை மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். ஹைகிரவுண்ட்அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்கள் சாப்பிட்ட பழைய சோற்றில் பல்லி விழுந்திருக்கலாம் அல்லது ஊறுகாய் கெட்டுப் போனதாக இருந்திருக்க வேண்டும் என டாக்டர்கள்சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை அமைச்சர் மைதீன்கான் நேரில்சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+