ஈரோடு: கார்-லாரி மோதல்: ஐஜி மனைவி படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:தமிழக உளவுப் பிரிவு ஐஜி சிதம்பரசாமியின் கார் மீது லாரி மோதியதில் ஐஜியின் மனைவி படுகாயமடைந்தார். கார் டிரைவர் பலியானார்.

மதுரை காவல்துறை ஆணையராக இருந்தவர் சிதம்பரசாமி. சமீபத்தில்தான் அவர் உளவுப் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார்.

தனது மனைவி, அவரது தங்கை ஆகியோருடன் சென்னையிலிருந்து திருப்பூருக்கு காரில் போய்க் கொண்டிருந்தார் சிதம்பரசாமி. காரை போலீஸ்டிரைவர் சுப்ரமணியம் ஓட்டினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துரை அருகே சிப்காட் தொழில் பூங்கா அருகே கார் போய்க் கொண்டிருந்தேபாது எதிரே வந்த லாரி, கார் மீதுமோதியது.

இதில் ஓட்டுநர் சுப்ரமணியம் சம்பவ இடத்திலேயே பலியானார். சிதம்பரசாமி, மனைவி, அவரது தங்கை உள்ளிட்டோர் காயமடைந்தனர். அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐஜி மற்றும் அவருடன் பயணித்தவர்களை மீட்டு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர்.

தனியார் மருத்துவமனையில் ஐஜியின் மனைவி மற்றும் அவரது தங்கைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+