27% இடஒதுக்கீடு: தடை வருமா-நாளை தீர்ப்பு
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்கும் வகை செய்யும் சட்டத்திற்குஇடைக்கால தடை விதிக்க கோரிய மனு மீது விசாரணையின் தீர்ப்பு நாளை உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும்சட்டம் சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2007-08ம் கல்வியாண்டு முதலே இதை அமுல்படுத்துவது என மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பும் வெளியிட்டது. அரசின் இந்த உத்தரவுக்குஇடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜீத் பசாயத், எஸ்.எச்.கபாடியா ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. வழக்கு நாளை மீண்டும்விசாரணைக்கு வருகிறது. அப்போது இடைக்காலத் தடை விதிப்பது குறித்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications