காவிரி: எம்.பிக்களுடன் சோம்நாத் ஆலோசனை
டெல்லி:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விவகாரம் தொடர்பாக தமிழக, கர்நாடக எம்.பிக்களுடன் இன்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிஆலோசனை நடத்துகிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கர்நாடகம் கோரி வருகிறது. கர்நாடகத்தின் இந்தக்கோரிக்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் விவாதத்திற்கு மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அனுமதி அளிக்கக் கூடும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக தன்னிடம்சோம்நாத் உறுதியளித்திருப்பதாக முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறியுள்ளார்.
இந்த நிலையில் இரு மாநில மக்களவை எம்.பிக்களின் கூட்டத்தை சோம்நாத் சாட்டர்ஜி இன்று கூட்டியுள்ளார். நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து எந்தவகையில் விவாதம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து எம்.பிக்களுடன் சோம்நாத் சாட்டர்ஜி ஆலோசனை மேற்கொள்கிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டால், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகவும்விவாதிக்கப்பட வேண்டும். இரு பிரச்சினைகளிலும் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்று நேற்றுதான் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்என்பது நினைவிருக்கலாம்.
நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த விவாதம் மக்களவையில் வரும்போது இரு மாநில எம்.பிக்களும் அணல் பறக்க மோதிக் கொள்ளக் கூடியவாய்ப்புகள் உள்ளதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications