டென்னிஸ் கோச் மனைவி மீது சரமாரி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பெண்களுடன் செக்ஸ் ஆட்டம் ஆடியதாக மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளடென்னிஸ் கோச் சுரேஷ்குமாரின் சகோதரர்கள், சுரேஷ் மிகவும் நல்லவர் என்றும் தீபாதான் பிரான்ஸ் நாட்டுஇளைஞரை கல்யாணம் செய்து கொள்வதற்காக நாடகமாடி வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டைசுமத்தியுள்ளனர்.

சென்னை பாலவாக்கம் விஜிபி லேஅவுட்டைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமார் மீது அவரதுமனைவி தீபா சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

பல பெண்களுடன் செக்ஸ் களியாட்டத்தில் ஈடுபடுகிறார், தன் கண் முன்பே பெண்களுடன் உடலுறவுகொண்டார், அடித்து உதைத்தார், பயிற்சிக்கு வரும் மாணவிகளிடமும், அவர்களின் தாயார்களிடமும் தகாதஉறவு வைத்துக் கொண்டார் என தீபா கொடுத்த புகாரால் சென்னையே பரபரப்பில் ஆழ்ந்தது.

தீபா கொடுத்த புகாரின் பேரில் சரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தீபா மீது சரமாரியாகபுகார்களைக் கூறி சுரேஷ்குமாரின் சகோதரர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சுரேஷ்குமாரின் அண்ணன்களான டாக்டர் ரமேஷ், வழக்கறிஞர் சேகர் (இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்வழக்கறிஞராகப் பணியாற்றுகிறாராம்) ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து தீபா குறித்து சரமாரியானபுகார்களைத் தெரிவித்தனர்.

நாங்கள் மிகவும் கவுரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி மாவட்டம்மருங்காபுரி ஆகும். சுரேஷ்குமார் தான் எங்களது வீட்டில் கடைசிப் பையன். சுரேஷ்குமார் வக்கீலுக்குப்படித்தவர். 1989ம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்தார். பின்னர் பகுதி நேர வக்கீலாகப் பணியாற்றிவந்தார்.

விளையாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் சுரேஷ். விளையாட்டு உலகில் பிரபலமானவரும் கூட. அவர் மீதுபல பெண்கள் ஆசைப்பட்டனர். அப்படித்தான் தீபாவும், சுரேஷ்குமாரை கல்யாணம் செய்து கொள்ளவிரும்பினார்.

அந்த சமயம், சுரேஷ்குமாரும், நிகிலாவும் செய்து கொண்ட முதல் திருமணமும், இருவரும் செய்து கொண்டவிவகாரத்தும் தீபாவுக்குத் தெரியும். எல்லாம் தெரிந்த அவர், எனது தம்பியை அடிக்கடி தனிமையில் சந்தித்துப்பேசிப் பழகி தனது வலையில் வீழ்த்தினார். 4 ஆண்டுகள் காதலித்த பின்னர் இருவரும் கல்யாணம் செய்துகொண்டனர்.

ஒரு குழந்தையும் பிறந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தன. தற்போது தீபா தங்கியுள்ளவீட்டை 22 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து கட்டியவர் சுரேஷ்குமார்தான். ஆனால் வீட்டை அவரதுபெயரில் எழுதாமல், தீபா பெயரில் அவரது பெற்றோர் எழுதி வைத்து விட்டனர். இதனால்தான் பிரச்சினைஎழுந்தது.

சுரேஷ்குமாருக்கு பெண்கள் தொடர்பு இருப்பதாக தீபா கூறுகிறார். ஆனால் உண்மையில் தீபாவுக்குத்தான்ஆண் நண்பர்கள் அதிகம். இரவு ஆண் நண்பர்களுடன் சுற்றி விட்டு நெடு நேரம் கழித்துத்தான் தீபா வீடுதிரும்புவார். இதுகுறித்து எனது தம்பி பலமுறை எங்களிடம் சொல்லி அழுதுள்ளான்.

சில சமயம் காருக்குள்ளேயே தனது ஆண் நண்பர்களுடன் தீபா படு நெருக்கமாக இருந்ததை சுரேஷ்குமார்பார்த்துள்ளார். இந்த நிலையில்தான் அலுவலக வேலையாக பிரான்ஸ் சென்றார் தீபா. அங்கு டோமினிக்என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர்.

இந்தியா வந்த பிறகும் கூட இந்த நட்பு தொடர்ந்தது. தொலைபேசியில் விடிய விடியக் கூட இருவரும்பேசியுள்ளனர். இவர்களின் பேச்சை ஒரு நாள் சுரேஷ்குமார் டேப் செய்தார். அந்த பேச்சில் ,நீ எப்போதுஅவனை விட்டு வரப் போகிறாய் என்று டோமினிக் கேட்டுள்ளார். அதற்கு தீபா, சீக்கிரமே வந்து விடுவேன்என்று தீபா பேசியுள்ளார். இதிலிருந்தே தீபாவின் சுய ரூபம் தெரிய வரும்.

எனது தம்பியை விட்டு விட்டு டோமினிக்கை கல்யாணம் செய்து கொள்வதற்காகவே இப்படி ஒருஅபாண்டமான பழியை எனது தம்பி மீது போட்டுள்ளார் தீபா.

இதுதவிர சுரேஷ்குமாரின் கையெழுத்தைப் போட்டு போலியான பாஸ்போர்ட் பெறவும் அவர் முனைந்தார். இதுசுரேஷ்குமாருக்குத் தெரிய வந்து அவர் பாஸ்போர்ட் அலுவலகம் போய் அதைத் தடுத்து விட்டார். இதனால்ஆத்திரமடைந்த தீபா, அடியாட்களை ஏவி விட்டு எனது தம்பியைத் தாக்கினார். இதுகுறித்து தெளிவாகபோலீஸில் புகார் கொடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு மே மாதம் விவகாரத்து கேட்டு தீபா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளநிலையில், வழக்கு தனக்கு சாதகமாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு இப்போது சுரேஷ்குமார் மீதுதவறான புகார்களைக் கூறியுள்ளார்.

எனது தம்பி 18 ஆண்டுகள் டென்னிஸ் பயிற்சி அளித்து வருகிறார். இதுவரை அவர் மீது யாருமே புகார்கூறியது கிடையாது என்றார் சேகர்.

இந்தப் புகார்கள் குறித்து தீபாவிடம் கேட்டபோது, எனது புகாரில் எந்த மாற்றமும் இல்லை. அதில் இன்னும்நான் உறுதியாக இருக்கிறேன். நான் கூறிய அனைத்துப் புகார்களுக்கும் என்னிடம் போதுமான ஆதாரங்கள்உள்ளன என்றார் தீபா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+