எம்.பி. பதவி: காங்.கில் தள்ளுமுள்ளு ஆரம்பம்
சென்னை:தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி பதவிக்குப் போட்டியிட, காங்கிரஸ் கட்சியில் பெரும் அடிதடி ஆரம்பித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக உள்ள ஞானதேசிகனின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.இதையடுத்து அந்த இடத்தில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்துக் கோஷ்டிகளும் கடும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இப்பதவிக்கு குறி வைத்துள்ள முக்கியத் தலைவர்களில் முதன்மையானவர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி. தனக்கு எம்.பி. தேர்தலில் சீட் தரவேண்டும் என கட்சி மேலிடத்தை வலியுறுத்தி வருகிறாராம்.
ஆனால் அவருக்குக் கடும் போட்டியாக ஜெயந்தி நடராஜன் உருவெடுத்துள்ளார். தனக்கு கட்சி மேலிடத்தில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்திசீட்டைப் பிடிக்க அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். எம்.பி. ஆகி விட்டால் அடுத்து அமைச்சர் பதவியை எளிதாக பிடித்து விடலாம் என்பதுஜெயந்தியின் கணக்கு.
ஆனால் இவர்களுக்கு தர வேண்டாம், ஞானதேசிகனுக்கே மீண்டும் சீட் கொடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தரப்பு மேலிடத்தை வற்புறுத்திவருகிறதாம்.
இவர்கள் தவிர ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட மற்ற கோஷ்டிகளும் கூட சீட்டைப் பிடிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்துவருகின்றன. இருந்தாலும் இப்போதைக்கு கிருஷ்ணசாமி, ஜெயந்தி நடராஜன், ஞானதேசிகன் ஆகியோருக்கு இடையேதான் போட்டி கடுமையாகஉள்ளது. இவர்களில் ஒருவருக்குத்தான் சீட் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொய்லி வைக்கும் ஆப்பு:
இதற்கிடையே, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆவலோடு காத்துள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பார்வையாளரான வீரப்ப மொய்லி பெரிய ஆப்பு ஒன்றை வைத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராக கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்ட பின்னர் மற்ற நிர்வாகிகள் யாரும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் நிர்வாகிகள் நியமனம்இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓராயிரம் கோஷ்டிகள் இருப்பதாலும், மாநில அளவில் பத்துக்கும் மேற்பட்ட கோஷ்டிகள் இருப்பதாலும்,நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் திணறி வந்தது காங்கிரஸ் மேலிடம்.
நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த கடந்த மாதம் சென்னைக்கு வீரப்ப மொய்லி வந்தபோது அவரை அத்தனை கோஷ்டிகாங்கிரஸாரும் முற்றுகையிட்டு ஆளுக்கொரு பட்டியலை நீட்ட, விட்டால் போதுமடா விட்டலாச்சார்யா என்ற கதையாக தப்பித்தோம்பிழைத்தோம் என்று அங்கிருந்து தப்பி ஓடினார் மொய்லி.
இவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது, நாமாக பார்த்து ஏதாவது செய்தால்தான் சரி என்று நினைத்த மொய்லி இப்போது ஒருசூப்பர் ஐடியாவை கட்சி மேலிடத்திடம் கூறி அவர்களின் ஒப்புதலையும் பெற்று விட்டாராம்.
அதாவது மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமிக்காமல், மேற்பார்வையாளர்கள் என்ற புதிய பதவியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.இந்த மேற்பார்வையாளர் பொறுப்பில் புதிதாக யாரையும் நியமிக்காமல், எம்.எல்.ஏக்களையே நியமிக்கவும் மொய்லி திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர் பதவி உள்ளது. இருப்பினும் இந்த ரீதியில் மேற்பார்வையாளர்களை நியமிக்காமல்,வருவாய் மாவட்டத்துக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் நியமிக்க மொய்லி திட்டமிட்டுள்ளாரம்.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை என சில மாவட்டங்களுக்கு தலா 2 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனராம். சென்னைக்குசுதர்சனம், யசோதா ஆகிய இரு எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
இந்த மேற்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் மாவட்டங்களில் காங்கிரஸின் நிலை என்ன, அங்கு யாருக்கு செல்வாக்கு உள்ளது,காங்கிரஸின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும்.
மொய்லியின் இந்தத் திட்டத்தால் வாசனைத் தவிர மற்ற அனைத்துக் கோஷ்டியினரும் கடுப்பாகி உள்ளனராம். வாசன் தரப்பு கமுக்கமாகஇருப்பதற்குக் காரணம், அவர்கள் கையில் 18 எம்.எல்.ஏக்கள் இருப்பதால்தானாம்.
மொய்லியின் இந்த மேஸ்திரி திட்டத்தால் காங்கிரஸ் கட்சி கலகலத்துப் போய்க் கிடக்கிறது. விரைவில் இது வேரு ரூபத்தில் வெடிக்கும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications