திமுகவின் அரிசிக் கடத்தல்: முறியடித்த சிபிஎம்
திண்டுக்கல்:ரேஷன் கடையிலிருந்து அரிசியைக் கடத்திய திமுகவினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் சேர்ந்து தடுத்து நிறுத்திகடத்தல் முயற்சியை முறியடித்தனர்.
திண்டுக்கல்லில் உள்ள ஒரு ரேஷன் கடையிலிருந்து திமுகவினர் அரிசி கடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் அங்கு விரைந்தனர்.
அப்போது மினி லாரியில், திண்டுக்கல் நகர திமுக இளைஞர் அணி உதவிச் செயலாளர் ஜி.டி.ராஜா தலைமையில் திமுகவினர் அரிசியைக் கடத்திச்செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியை மடக்கிய மார்க்சிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் அரிசிக் கடத்தலை முறியடித்து அரிசி மூடைகளை மீட்டுபோலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
திமுகவினரின் அரிசிக் கடத்தலை, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் மடக்கிப் பிடித்ததுதிண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications