அம்மா வாங்க, அக்கா வாங்க, தங்கச்சி வாங்க!
சென்னை:வேலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு வேண்டி, வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமத்துடன் வீடு வீடாகசென்று தேமுதிக மகளிர் அணியினர் பொதுமக்களை அழைத்து வருகின்றனர்.
தேமுதிக உதயமான பிறகு நடைபெறவுள்ள பெரிய அளவிலான முதல் மாநாடு என்ற பெயர் வேலூரில் 8ம் தேதி நடக்கவுள்ள மாநில மகளிர்அணி மாநாட்டுக்குக் கிடைத்துள்ளது.
வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தேமுதிக நிர்வாகிகள் முடுக்கி விட்டுள்ளனர். விஜயகாந்த்தின்மனைவி பிரேமலதா விஜயகாந்த் நேரில் இருந்து ஏற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்.
மாநாட்டுக்காக தென் சென்னை தேமுதிக மகளிர் அணி சார்பாக வித்தியாசமான முறையில் மக்களை அழைத்து வருகின்றனர். மாவட்ட மகளிர்அணி செயலாளர் ரூபாவதி தலைமையில், மகளிர் அணியினர் வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ ஆகியவற்றுடன் அழைப்பிதழை எடுத்துக்கொண்டு வீடு வீடாக செல்கின்றனர்.
கல்யாணத்திற்கு அழைப்பு விடுப்பது போல மறக்காக குடும்பத்தில் உள்ள அத்தனை பெண்களும் மாநாட்டுக்கு வந்துடணும் என்று வேண்டிக்கேட்டுக் கொள்கின்றனர்.
தேமுதிகவினரின் இந்த வித்தியாசமான அழைப்பு பொதுமக்களை, குறிப்பாக பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications