நுழைவுத்தேர்வு ரத்து: சட்டத்துக்கு கலாம் ஓ.கே!
டெல்லி:எம்.பி.பி.எஸ், பி.இ உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வகை செய்யும் சட்ட மசோதாவிற்குகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒப்புதல் அளித்து விட்டார். இதையடுத்து இந்த ஆண்டு முதல் பிளஸ்டூ தேர்வு மதிப்பெண்அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்குபலன் கிடைக்கவில்லை, எனவே நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்தன.
இதையடுத்து தமிழக சட்டசபையில் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாகுடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு தற்போது குடியரசுத் தலைவர் கலாம் ஒப்புதல் அளித்த கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை தலைமைச் செயலாளர் திரிபாதிதெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக இது அரசிதழில் வெளியிடப்படும்.
நுழைவுத் தேர்வு ரத்து மசோதா சட்டம் ஆகி விட்டதால், இந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடைபெறாது. இதுதொடர்பாக மாணவ,மாணவியர், பெற்றோர்களிடம் நிலவி வந்த குழப்பமும், மன உளைச்சலும் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே, நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்ட மசோதாவை எதிர்த்து தஞ்சையைச் சேர்ந்த மதன்மோகன், ஓய்வு பெற்றதலைமை ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிற 14ம் தேதி விசாரணைக்கு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications