காவிரி: கெஜட்டில் வெளியிட ஏன் தாமதம்-ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட தாமதம் செய்வது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதியின் தவறான அணுகுமுறையால் தான் காவிரி பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் இழுபறி நிலை தொடர்கிறது.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அதிமுகவின் கோரிக்கைப்படி அரசிதழில் அறிவிக்கையாக வெளியிடப்பட்டு விட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கும்பாதகங்களைப் பற்றி நடுவர் மன்றத்திடம் முறையிட முடியுமா என்பது கேள்விக் குறியாகிவிடும் என்கிறார் கருணாநிதி.

தற்போது டெல்டா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னை, குறுவை சாகுபடிக்கு போதுமான நீர் கிடைப்பது எப்படி என்பது தான். ஜூன் மாதத்தில்தண்ணீர் திறந்துவிட்டால் தான் விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். அதற்கான ஏற்பாட்டை கருணாநிதி இதுவரை செய்யவில்லை.

விவசாயிகளுக்கு தேவையான நீர் ஆதாரத்திற்கு கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக் கான ஒரே வழிநடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது தான்.

இதற்கும் தீர்ப்பில் உள்ள பாதகமான விஷயங்கள் குறித்து நடுவர் மன்றத்திடம் மறு ஆய்வு மனு செய்வதற்கும், உச்சநீதிமன்றத்தில் முறையீடுசெய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு எந்த நிர்பந்தமும் இல்லை. தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால்தான் குறைந்தபட்ச தண்ணீரையாவது பெற முடியும்.

காவிரி கண்காணிப்பு வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்து இவற்றுக்கு, சரியானவர்களைபொறுப்பில் நியமித்தால் தான் நமக்கு தண்ணீர் கிடைக்கும்.

இவற்றையெல்லாம் செய்ய வேண்டுமானால் இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டால் தான் செய்ய முடியும்.

முதல்வர் கருணாநிதி உருப்படியான காரியத்தில் கவனம் செலுத்தி, காவிரி நீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தர என்ன வழி என்று பார்க்கவேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்து ஒரு மாதம் ஆன நிலையில் இதுவரை கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+