முழு வீச்சில் பாம்பன் அகல ரயில் பாதை பணி
ராமேஸ்வரம்:பாம்பன் முதல் ராமேஸ்வரம் இடையிலான அகலப் பாதை அமைக்கும் பணி திட்டமிட்டபடி முடிவடையாததால், ஏப்ரல் 1ம் தேதி முதல்இப்பாதையில் போக்குவரத்து தொடங்காது என ரயில்வே அறிவித்துள்ளது.
பாம்பன் முதல் ராமேஸ்ரவம் இடையிலான ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்படுகிறது. இதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தப்பணியை மார்ச் 31ம் தேதிக்குள் முடித்து ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் போக்குவரத்தை தொடங்க தென்னக ரயில்வே திட்டமிட்டிருந்தது.
ஆனால் இப்பணி தற்போது தாமதமாக நடந்து வருவதால், திட்டமிட்டபடி ஏப்ரல் 1ம் தேதி முதல் போக்குவரத்து தொடங்காது என தென்னகரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறியுள்ளார்.
அகலப் பாதைப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாம்பன் ரயில் பாலத்திற்குபதில் புதிய பாலம் அமைத்து அகல பாதை அமைக்கும் பணிக்காக ரூ.225 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
தூக்கு பாலம் அமைப்பதற்கான ரிவிட்டிங் வேலை தான் பாக்கி உள்ளது. 30 ஆயிரம் ரிவிட்டுகளில் 18 ஆயிரம் ரிவிட்டுகள் முடிக்கப்பட்டுஉள்ளன. மொத்தம் உள்ள 96 பிளேடுகளில் 36 பிளேடுகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்தும், வடக்கு மற்றும் தென் மேற்கு ரயில்வேயிலிருந்தும் 225 ரயில்வேஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மார்ச் 31ம் தேதிக்குள் பணிகளை முடிக்க இயலாது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் பணி முடிவடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின் சோதனை ஓட்டம்நடைபெறும். மே இறுதிக்குள் ரயில்கள் ஓட வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications