செங்கை கோர்ட்டில் பிரசாத்: 15 நாள் காவல்
செங்கல்பட்டு:விபச்சார வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கன்னட பிரசாத் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டது.
விபச்சாரப் புரோக்கர் கன்னட பிரசாத் மீது சரமாரியாக வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டு காஞ்சிபுரம்மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் போலீஸார் லாட்ஜ் ஒன்றில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பிரசாத் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக 2 பெண்கள் பிடிபட்டனர். ஆனால் பிரசாத்மட்டும் எப்படியோ தப்பி விட்டார். அந்த வழக்கில் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தற்போது பிரசாத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி ரவி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications