விஜயகாந்த் மனைவி கார் மோதி வாலிபர் காயம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா சென்ற கார் மோதி, மோட்டார் சைக்கிளில் போன வாலிபர் காயமடைந்தார்.

வேலூரில் வருகிற 8ம் தேதி தேமுதிக மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக விஜயகாந்த்தின்மனைவி பிரேமலதா கார் மூலம் வேலூர் சென்றார்.

அவரது கார் சேத்துவலை என்ற இடத்தில் போய்க் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி விட்டது. இதில் அந்த மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த மூஞ்சியூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்ற வாலிபர் காயமடைந்தார்.

உடனடியாக அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்டிரைவர் கங்காதரனை கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+