திமுகவுக்கு கண்மூடித்தனமான ஆதரவு: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:திமுக அரசு முழுமையாக 5 ஆண்டு பதவிக்காலத்தை பூர்த்தி செய்ய பாமக முழு ஆதரவு அளிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.

தர்மபுரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், பொருளாதாரம், கல்வியில் தமிழகம் 100 சதவீத வளர்ச்சியைப் பெற அரசுக்குத்தேவையான ஆக்கப்பூர்வமான யோசனைகளை பாமக தெரிவிக்கும். இந்த இலக்கை தமிழகம் எட்ட வினையூக்கியாக பாமக செயல்படும்.

திமுக அரசு தனது முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்ய எந்தவித நிபந்தனையும் இன்றி, கண்ணை மூடிக் கொண்டு பாமக ஆதரவு அளிக்கும்.

அரசுக்கு நாங்கள் கூறும் கருத்துக்கள் ஆலோசனைகள்தான், குற்றச்சாட்டுக்கள் அல்ல.

தமிழகம் பல விஷயங்களில் முதலிடத்தில் உள்ளது. மது விற்பனை, பிறந்த நாள் கொண்டாடுவது, ரசிகர் மன்றம் எடுப்பது, சினிமா எடுப்பதுஆகியவற்றில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறது.

தேசிய குடும்ப நல அமைப்பு நாடு முழுவதும் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மனைவிகளை அடிக்கும்கணவன்மார்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 41.9 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற தென் மாநிலங்களை விட அதிகம்.

இதற்கு முக்கியக் காரணம் என்ன என்று பார்த்தால் குடிப்பழக்கம்தான் என்பது தெரியும். குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்துக் கொண்டுமதுவை விற்கிறோம்.

அது மட்டுமா? அரசே நேரடியாக பார்களைத் திறந்து வைத்து மதுவை விற்கிறது. மது விற்பனையில் அரசு நுழைந்த பிறகு தமிழகத்தில்குடிப்பழக்கம் அதிகரித்து விட்டது. கணவர்களிடமிருந்து அடிவாங்கும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால், முதலில் மதுக்கடைகளை மூட வேண்டும்.

அரசுக்கு இதன் மூலம்தான் வருமானம் வருகிறது, எனவே மதுக் கடைகளை மூட முடியாது என்றால் முதல் கட்டமாக மதுக் கடைகளோடுஇணைந்து இருக்கும் பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை இந்த பட்ஜெட் அறிவிப்பிலேயேஎதிர்பார்க்கிறோம்.

எங்களது ஆலோசனைகளை அரசின் நன்மைக்காகத்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அதை நான் பாராட்டுகிறேன்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியானாலும் சரி, தோழமைக் கட்சியானாலும் சரி, ஆளுங்கட்சிக்கு நல்ல ஆலோசனைகள் சொல்வது எல்லா நாடுகளிலும்உள்ள ஜனநாயக நடைமுறை. ஆனால் எதிர் கட்சிகளை எதிரிக் கட்சிகளாக நினைத்து செயல்பட்டால் ஜனநாயகம் வளராது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டது போல் கர்நாடக அரசியல் கட்சிகள்போர்க் குணத்துடன் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிலும் உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, இறுதி தீர்ப்பு பற்றி விவாதிக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

ஓசூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அங்குள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தினால், விவசாயிகளுடன் இணைந்து நானேபோராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+