மீனவர்கள் மீது தாக்குதல்: வி.சி. ஆர்ப்பாட்டம்
சென்னை:தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் பேசுகையில், இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்துதாக்குதல் நடத்தி வருவது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இதுகுறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி,தெளிவுபடுத்தி உடனடியாக இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுடன் விவாதித்து இதற்கு ஒரு முடிவு கண்டு, தமிழக மீனவர்களைக் காக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
துணை பொது செயலாளரும், எம்.எல்.ஏவுமான செல்வ பெருந்தகை, எம்.எல்.ஏ. ரவிக்குமார், திரைப்படஇயக்குநர் சீமான் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இலங்கை அதிபர் மகிந்திரா ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தொண்டர்களைபோலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications