கேரள ரயிலை மறித்து பயணிகள் மறியல்:200 பேர் கைது-ஈரோடு அருகே பதட்டம்
ஈரோடு:சென்னையிலிருந்து கரூர் வழியாக மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து இன்று ஈரோடு அருகே திருப்பூர்,கோவைக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 200க்கும் மேற்பட்டபயணிகளை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரிலிருந்து கரூர் வழியாக மங்களூருக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில்தான் கோவை, திருப்பூருக்குநூற்றுக்கணக்கானவர்கள் வேலைக்கு சென்று வந்தனர். சீசன் டிக்கெட் மூலம் இவர்கள் வேலைக்கு சென்று வந்தனர்.
ஆனால் ரயிலின் நேரம் தாறுமாறாக மாற்றப்பட்டதால் அவர்கள் ரயில் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டனர். உரிய நேரத்தில் வேலைக்குப் போகவேண்டும் என்பதற்காக நேரத்தை மாற்றக் கோரி வந்தனர். ஆனால் பலன் இல்லை.
இந்த நிலையில், இன்று காலை இந்த ரயில் வந்தபோது ரயிலின் முன்பதிவுப் பெட்டிகள் உள்பட அனைத்துப் பெட்டிகளிலும் சீசன் டிக்கெட்பயணிகள் ஏறிக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் ஈரோடு மாவட்டம் ஊத்துக்குழி என்ற இடத்தில் வந்தபோது டிக்கெட் பரிசோதகர் வந்து, முன்பதிவுப் பெட்டிகளில் இருந்த பயணிகளைஇறங்குமாறு கூறினார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
அத்தோடு அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஹைதராபாத்திலிருந்துதிருவனந்தபுரம் சென்ற சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது.
எங்களுக்கு உரிய ரயில் வசதி செய்து தரப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் முன்பதிவுப் பெட்டிகளில்தான் பயணிப்போம், பலமுறை ரயில்வசதி கோரியும் இதுவரை ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் இந்தப் பாதையில் ஒரு ரயிலையும் இயக்கவிட மாட்டோம் என்று பயணிகள் ஆசேவமாக கூறினர்.
தகவல் அறிந்ததும் போலீஸாரும், ரயில்வே அதிகாரிகளும் விரைந்த வந்து பேச்சு நடத்தினர். ஆனால் பயணிகள் தங்களது கோரிக்கையில்உறுதியாக இருந்தனர். இதையடுத்து 200க்கும் மேற்பட்ட பயணிகளை போலீஸார் கைது செய்தனர்.
இந்த ரயில் பாதை கேரள மாநிலத்தின் பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் நகரங்களானகோவை, திருப்பூருக்கு இந்தப் பாதை வழியாகத்தான் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்குச் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கெனஒரு ரயில் வசதியும் உருப்படியாக செய்து தரப்படவில்லை என்பது வேதனை தரும் விஷயமாகும்.












Click it and Unblock the Notifications