கணவரின் 2வது கல்யாணம்:குழந்தையுடன் வந்து நிறுத்திய மனைவி

Subscribe to Oneindia Tamil

சேலம்:கணவர் 2வது கல்யாணம் செய்து கொள்ளப் போவதை அறிந்த முதல் மனைவி தனது குழந்தையுடன் கல்யாண மண்டபத்திற்கு நள்ளிரவில் வந்துகல்யாணத்தைத் தடுத்து நிறுத்தினார். போலீஸார் விரைந்து வந்து மாப்பிள்ளை கோலத்தில் இருந்தவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிசாரணை நடத்தினர்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். 40 வயதாகும் இவருக்கும், மேட்டூரைச் சேர்ந்த சவுடேஸ்வரி என்றபெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடப்பதாக இருந்தது.

Bhathrinatha

இதற்காக குகை காளியம்மன் கோவில் மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் களை கட்டியிருந்தன. மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் கல்யாணஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர்.

அப்போது சினிமாவில் வருவது போல, ஒரு பெண் தனது குழந்தையுடன் போலீஸ் புடை சூழ அங்கு வந்து கல்யாணத்தை நிறுத்துங்கள் என்றுகூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெண் வீட்டார், குழந்தையுடன் வந்த பெண் யார் என்று விசாரித்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையுடன் வந்த பெண்,பத்ரிநாத்தின் முதல் மனைவி உஷா. இவர் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரை பத்ரிநாத் காதலித்துக்கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கெவின் என்கிற 3 வயது ஆண் குழந்தையும் உள்ளான்.

Usha

இந்தக் கல்யாணத்தை தனது பெற்றோரிடம் கூறாமல் மறைத்து விட்ட பத்ரிநாத், ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் பத்ரிநாத்தின்தாயார் மரணமடைந்தார். அதன் பின்னர் உஷாவை சரிவர பார்க்க வருவதில்லையாம் பத்ரிநாத்.

இதனால் சந்தேகமடைந்த உஷா விசாரித்தபோது 2வது கல்யாணத்திற்கு பத்ரிநாத் தயாராகி விட்டது தெரிய வந்தது. இதையடுத்துஅம்மாப்பேட்டை போலீஸாரிடம் முறையிட்டார். இதைத் தொடர்ந்தே போலீஸார் சகிதம் வந்து கல்யாணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

மாப்பிள்ளை கோலத்தில் புதுக் கல்யாணத்திற்குத் தயாராக இருந்த பத்ரிநாத்தை போலீஸார் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று பேச்சுவார்த்தைநடத்தினர். பத்ரிநாத்தின் முதல் திருமண விவரம் தெரிய வந்ததால், சவுடேஸ்வரியின் குடும்பத்தினர் கல்யாணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி விட்டனர்.

தனது தந்தை கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என்று மிரட்டியதால்தான் 2வது கல்யாணத்திற்குசம்மதித்ததாக போலீஸாரிடம் பத்ரிநாத் தெரிவித்தார். மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அவருக்கு போலீஸார் அறிவுரை கூறினர். இருவரையும்சேர்த்து வைக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+