பணம் தராததால் இயக்குநரைக் கொன்ற நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை வடபழனியில் திரைப்பட இயக்குனர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை கொலை செய்த புதுமுக நடிகையான சங்கீதாவைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள சூரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வா. 40 வயதாகும் இவருக்கு மைதிலி என்ற மனைவியும், 3குழந்தைகளும் உள்ளனர்.

பல திரைப்படங்களில் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வா, இயக்குநராக அவதாரம் எடுத்தார். கடந்த ஆண்டுகாதோரம் போய் சொல், நினைவெல்லாம் நீயே என இரு படங்களுக்கு பூஜை போட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தார்.

Selva

நினைவெல்லாம் நீயே படத்தில் பிரவீன்குமார், ரியாஸ் ஆகிய புதுமுகங்கள் ஹீரோக்களாக நடித்து வந்தனர். சங்கீதா என்ற நடிகை ஹீரோயினாகநடித்து வந்தார்.

செல்வாவின் பட அலுவலகம் வடபழனி 100 அடி சாலையில் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ளது. நேற்று முன்தினம் இரவுநடிகை சங்கீதாவுடன் விடிய விடிய செல்வா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணிவரை இருவரும் விழித்திருந்ததாகவும் தெரிகிறது.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் செல்வாவின் அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத்தகவல் கொடுத்தனர்.

போலீஸார் வந்து அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது செல்வா பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. உடலில் எந்தக் காயமும் இல்லை. அந்தஅறையில் மது பாட்டில்கள் ஏராளமாக இருந்தன. ஆணுறைகளும் பெருமளவில் கிடந்தன.

மதுவில் விஷம் கலந்து கொடுத்து செல்வா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Sangeetha

கடந்த 6 மாதமாக இந்த அலுவலகத்தை வைத்துள்ளார் செல்வா. பல இளம் பெண்களும், ஆண்களும் இங்கு வந்து போவார்களாம். அவர்களிடம்நடிக்க வைப்பதாக கூறி பெருமளவில் செல்வா பணம் வாங்கி விட்டு மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலரும் தினசரிவந்து செல்வாவிடம் சண்டை போடுவது வழக்கமான காட்சியாம்.

இந்த நிலையில் செல்வாவுடன் கடைசியாக தங்கியிருந்த சங்கீதாவுடன் செல்வாவுக்கு மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாம். இருவரும் கணவன்,மனைவி போலவே பழகி வந்தார்களாம்.

கடைசியாக சங்கீதாதான் செல்வாவுடன் இருந்ததால், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இதில் சங்கீதா போலீஸ் பிடியில்சிக்கினார். அவரைக் கைது செய்த போலீஸார் செல்வா மரணம் தொடர்பாக சங்கீதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கொலை செய்தது எப்படி?:அப்போது இயக்குநர் செல்வாவைக் கொலை செய்தது எப்படி என்பது குறித்து நடிகை சங்கீதா போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம்கொடுத்துள்ளார். செல்வா தங்கியிருந்த அறைக்கு அவரைக் கூட்டிச் சென்று கொலை செய்தது எப்படி என்பதை நடித்துக் காட்டவும் கூறி அதைப்பதிவு செய்து கொண்டனர்.

சங்கீதா கொடுத்த வாக்குமூலத்தில்,

நானும், செல்வாவும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். படக் கதை குறித்து என்னுடன் செல்வா விவாதிப்பார். இருவரும் நீண்ட காலமாக பழகிவந்தோம். தினமும் இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டே பேசிக் கொண்டிருப்போம்.

அவருக்குப் பணம் இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்தது போலாகி விடும். பத்து நாட்களுக்கு முன்புதான் நகைகளை அடகு வைத்து ரூ. 10,000பணம் கொண்டு வந்தார். ஆனால் அது செலவாகி விட்டது.

முன்பு எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார். பின்னர் அதை நிறுத்தி விட்டார். இதனால் அவரை விட்டு விலகி விடத் தீர்மானித்தேன். நேற்றுமுன்தினம் இரவும் இருவரும் நீண்ட நேரம் மது அருந்தினோம். அப்போது கையில் பணம் இல்லையே என்று கூறி கழுத்தை நெரித்துக் கொண்டுதற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அதைப் பார்த்த நான், நானே அந்தத் துண்டை வாங்கி அவரது கழுத்தை இறுக்கிவிட்டேன். அவர் இறந்து விட்டார் என்று தெரிந்ததும் கதவைவெளிப்பக்கமாக பூட்டி விட்டு தப்பினேன் என்று கூறியுள்ளார் சங்கீதா.

துணை நடிகைகளுடன் ஜாலி செய்த செல்வா:

Sangeetha

இதற்கிடையே, செல்வாவுக்கும், பல துணை நடிகைகளுக்கும் இடையே குஜாலான தொடர்புகள் இருந்ததாக போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

தினசரி பத்து துணை நடிகைகளாவது செல்வாவின் அறைக்கு வந்து போவார்களாம். வந்தவர்கள் உடனடியாகத் திரும்ப மாட்டார்களாம், பல மணி நேரம் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பார்களாம்.

துணை நடிகைகளுடன் செல்வா ஜாலியாக இருந்தது சங்கீதாவுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. தன்னை 2வது கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துமாறு அவர் செல்வாவைவற்புறுத்தியுள்ளாராம். ஆனால் செல்வா அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இந்த கோபத்தில்தான் அவர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், சங்கீதா வேறு மாதிரியாக வாக்குமூலம் தந்துள்ளார்.சங்கீதாவின் சல்லாபம்:இதற்கிடையே துணை நடிகை சங்கீதா ஏகப்பட்ட ஆண்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளது போலீஸாருக்குத்தெரிய வந்துள்ளது.

செல்வா தங்கியிருந்த அறையில் கிடந்த சங்கீதாவின் செல்போனிலிருந்து இந்தத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.செல்வா மரணமடைவதற்கு முன்பு 20க்கும் மேற்பட்டோரிடம் சங்கீதா பேசியுள்ளார்.

அத்தனை பேரும் சங்கீதாவிடம் பலமுறை உல்லாசமாக இருந்தவர்களாம். சங்கீதாவின் செல்போனில் இருந்த எண்களைத்தொடர்பு கொண்ட போலீஸார் அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர்.

அவர்களில் நான்கு பேர் சாப்ட்வேர் என்ஜீனியர்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரையுலகப் புள்ளிகள் எனபலரும் சிக்கியுள்ளனர். செல்வா சாவதற்கு முன்பு சங்கீதா இவர்களுடன் பேசியுள்ளதால், இவர்களுக்கும், செல்வாசாவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் அனைவருமே சங்கீதாவுடன் உல்லாசம் மட்டுமே அனுபவித்துள்ளனராம். குறைந்தது 2000 ரூபாய் முதல்5000 ரூபாய் வரை பணம் கொடுத்து சங்கீதாவுடன் அவர்கள் சல்லாபமாக இருந்துள்ளனராம்.

பல சமயங்களில் இவர்கள் சங்கீதாவைத் தேடி வருவார்களாம். சில நேரங்களில் சங்கீதாவே கூப்பிட்டு கும்மாளம்போடுவாராம். சல்லாபத்தின்போது மது விருந்தும் அமர்க்களப்படுமாம். சில துணை நடிகைகளை ஏற்பாடு செய்துதரும் ஏஜென்டுகளும் கூட சங்கீதாவுடன் தொடர்பு வைத்துள்ளனராம்.

சங்கீதாவை மேலும் விசாரித்தால் பொம்பள கன்னட பிரசாத்தாகக் கூட அவர் இருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே செல்வாவின் மரணத்தால் அவரது மனைவி மைதிலி பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். செல்வா, மைதிலிதம்பதிக்கு திவ்யா, பூர்ணிமா, என இரு மகள்களும், டெல்லி பாய், ஆனந்த் என இரு மகன்களும் உள்ளனர்.

கணவர் இறந்த செய்தியை அறிந்து நெற்குன்றத்திலிருந்து சென்னைக்கு ஓடி வந்த மைதிலி கணவரின் உடலைப் பார்த்துவிழுந்து புரண்டு அழுதார்.

சினிமாவில் நுழைந்த பிறகு செல்வா முற்றிலும் பாதை மாறிப் போய் விட்டார். பெண் சகவாசம் ஏற்பட்டு விட்டது.என்னையும், குழந்தைகளையும் பார்க்கக் கூட வர மாட்டார். இதனால்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பிரிந்துவிட்டோம்.

5 மாதங்களுக்கு முன்புதான் எனது மாமியார் சமரசம் பேசி எங்களை சேர்த்தது வைத்தார். அதன் பின்னர் அம்பத்தூர்அருகே உள்ள சூரம்பேட்டில் வீடு பார்த்து தங்க வைத்தார்.

அடிக்கடி வீட்டுக்கு வருவார், பணம் கொடுப்பார், குழந்தைகளிடம் பாசமாக இருந்தார். ஆனால் ஒரு மாதத்திற்குமுன்பு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு சரிவர வராமல் இருந்தார். இப்போது உயிரை விட்டு விட்டார்.

இனிமேல் எப்படி நான்கு குழந்தைகளோடு வாழப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறி அவர் கதறி அழுததுபரிதாபமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+