சிறப்பு பஸ் கட்டணம்: ஜெ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:எம் சர்வீஸ் என்ற பெயரில் சென்னை நகரில் மறைமுகமாக அதிக அளவில் பஸ் கட்டணம் வசூலிப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

அறிவிக்கப்படாத பேருந்துக் கட்டண உயர்வை அரசு மறைமுகமாக செயல்படுத்தி வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

சென்னை நகரில் தற்போது சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் எல்லோ லைன், ப்ளூ லைன் என்கிற பேருந்துகளுக்கான கட்டணத்தைஅதிகப்படியாக திமுக அரசு மக்கள் மீது திணித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

"ஒட்டகத்துக்கு தொட்ட இடம் எல்லாம் கோணல் என்பார்களே அது போல திமுக அரசு செயல்படுத்துகிற திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து மக்கள்விரோதச் செயலாகவே இருக்கின்றன.

பொதுமக்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று கருதிக் கொண்டு, சாதாரண பேருந்துகளில் இருக்கும் நடைமுறைக் கட்டணமான குறைந்த அளவு2 ரூபாய் என்று இருந்ததை 3 ரூபாய் அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. இது மக்களை ஏமாற்றும் மோசடி நாடகம் ஆகும். இச்செயல் கடுமையானகண்டனத்திற்கு உரியதும் ஆகும்.

மக்களுக்காக, மக்களின் நலனுக்காக தான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர, மக்களையே ஏமாற்றும் அரசு மக்களுக்குத் தேவையில்லை.

சாதாரண பேருந்துகளில் உதாரணமாக 48ஏ என்று இருந்தால், அவற்றுக்கு முன்பாக "எம் என்று சேர்த்து விட்டால் கட்டணம் கூடிவிடுகிறது. "எம்என்ற எழுத்தை தான் கூடுதலாக சேர்த்து இருக்கிறார்களே தவிர எந்த விதத்திலும் பேருந்துகளில் உள்ள வசதிகளை கூட்டவில்லை.

பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்று முறையாக அறிவிக்காமல் அப்படி அறிவித்தால், திமுக அரசு கடும் கண்டனத்தை சந்திக்க வேண்டியதுஇருக்கும் என்கிற அச்சத்தால், மறைமுகமாக மக்களை ஏமாற்றும் நோக்கில் கூடுதல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருக்கிறது.

இச்செயல் அரசின் கோழைத்தனத்தையே காட்டுகிறது. இக்கூடுதல் கட்டணம் சம்பந்தமாக பொதுமக்களிடமோ எதிர்க்கட்சிகளிடமோ அல்லதுதொழிற்சங்கங்களிடமோ எவ்வித கருத்தும் கோரப்படவில்லை. ஆலோசனையும் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ மான அறிவிப்பும் இல்லை.இருந்த போதிலும் கூடுதல் கட்டணத்தை அரசு மக்களிடம் இருந்து வசூலித்து வருகிறது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்த எல்.எஸ்.எஸ். சேவையை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவற்றை எல்லோ லைன், ப்ளூ லைன்என்ற புதிய பெயர் வைத்து அவற்றின் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணத்தை வசூல் செய்கிறது இந்த அரசு.

எல்.எஸ்.எஸ். சேவையில் குறைந்த கட்டணம் 2 ரூபாய் 50 காசு என்று இருந்தது. தற்போது 5 ரூபாய் என்று கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.எல்லோ லைன் பேருந்து நிற்கும் இடத்தில் ப்ளூ லைன் பேருந்து நிற்காதவாறு செய்து இந்த சிறப்பு பேருந்துகளில் தான் பொதுமக்கள் பயணம்செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளுகிறது திமுக அரசு.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 1 ரூபாய் குறைத்து இருக்கிறது என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.க அரசு, பேருந்து கட்டணத்தைமறைமுகமாக அதிகப்படுத்தி இருப்பதன் மூலம் பொதுமக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறது.

அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கும் பேருந்துகளில் கட்டண உயர்வு என்று வெளிப்படையாக அறிவிக்காமல், மறைமுகமாக கட்டணஉயர்வை அமல்படுத்தி வரும் திமுக அரசு உடனடியாக இக்கூடுதல் கட்டணத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+