மகளிர் சமுதாயம் முன்னேறட்டும்: கருணாநிதி
சென்னை:உலக மகளிர் தின விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் மகளிர் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று முன்னேறட்டும் என்று முதல்வர் கருணாநிதிவாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினம் நாளை உலகெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து செய்திவெளியிட்டுள்ளார்.
அதில் முதல்வர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் ஏற்படுத்திய சமுதாய மேம்பாட்டு உணர்வுகளுக்கு உரமூட்டும்வகையில் இந்த அரசு மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி வரலாறு படைத்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கிட தனிச்சட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மகளிருக்குவாய்ப்பளித்துள்ளோம்.
இதுதவிர மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப் படிப்புத்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம், அஞ்சுகம்அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்,
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சத்தியா அம்மையார் நினைவு குழந்தைகள் காப்பகங்கள் திட்டம் உள்லிட்பல சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தி பெண்கள் முன்னேற்றத்திற்கு தேவையான பல உதவிகளும், சலுகைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டுவருகின்றன.
தாய்மார்கள் மனங்குளிர தரமான 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, மனம் மகிழ்ந்து பொது அறிவு பெற்றிட இலவச டிவி பெட்டிகள், மகளிர் நலனுக்காகஎரிவாயு இணைப்புடன் கூடிய இலவச அடுப்புகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் 6 மாதங்களுக்கு 6,000 ரூபாய் என புதியதிட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மகளிர் சமுதாயம் எழுச்சி பெற தமிழக அரசு இப்படிப் பல்வேறு திட்டங்களை ஆற்றி வரும் வேளையில் கொண்டாடப்படும் உலக மகளிர் தின விழாசிறப்பாக நடைபெறவும், அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெறும் வழிமுறைகளை மகளிர் சமுதாயம் அறிந்து, விழிப்புணர்வு பெற்றுமுன்னேறவும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications