நளினி மகள் இந்தியா வர உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர்ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர்,எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு செய்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் தலைமையிலான பெஞ்ச முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரித்ரா இந்தியக் குடியுரிமை கோரி இதுவரை விண்ணப்பிக்கவில்லை. அப்படி விண்ணப்பித்தால் அதைப்பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆரித்ரா இந்தியாவுக்கு வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. இங்கு வந்த பின்னர் இந்திய பாஸ்போர்ட்கோரி அவர் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications