மணல் திருட்டு: அரசுக்கு எதிராக பாமக வழக்கு
சென்னை:பாலாற்றில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை விதிமுறைகளுக்குப் புறம்பாக மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி பாமக எம்.எல்.ஏ.இளவழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆற்காடு தொகுதி பாமக எம்.எல்.ஏ. இளவழகன் இன்று உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வேலூர் மாவட்டம் வாலாஜா,அரக்கோணம், குடிமல்லூர், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் பாலாற்றில் மணல் அள்ள பொதுப்பணித்துறை மூலம் அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால் விதி.றைகளை மீறி இங்கு அதிக அளவில் மணல் அள்ளுகின்றனர். 2 யூனிட் அள்ளுவதாக கணக்குக் காட்டி விட்டு 7 யூனிட் வரை மணல்எடுக்கிறார்கள்.
3 அடி வரைதான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறையை மீறி 15 அடி வரை மணல் எடுக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக அரசுக்கு கடந்த7 மாதங்களில் ரூ. 14 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்தான் இதற்கு உடந்தையாக உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பரிசீலித்து, இதுதொடர்பாக நேரில்விசாரித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் கண்ணனை நியமித்தது. வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications