படிக்க விடாத கணவர்: பெண் டாக்டர் புகார்
சென்னை:மேல் படிப்பு படிக்க விடாமல் தொல்லை கொடுத்து வருவதாக கணவர் மீது பெண் டாக்டர் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்கொடுத்துள்ளார்.
சென்னை அருகே உள்ள திருநின்றவூரைச் சேர்ந்தவர் பவித்ரா. 24 வயதாகும் பவித்ரா, எம்.பி.பி.எஸ். டாக்டர் ஆவார். இவரது கணவர் பெயர்நிரஞ்சன் குமார். இவரும் டாக்டர், ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு எம்.எஸ். படிக்க விரும்பினார் பவித்ரா. இதற்கு முதலில் ஒத்துக் கொண்டார் நிரஞ்சன்குமார். ஆனால் அவரது தந்தைஅன்பழகன் மற்றும் தாயாருக்கு மருமகள் மேல் படிப்பு படிப்பது பிடிக்கவில்லை. படிக்க வேண்டாம் என தடை போட்டனர்.
பெற்றோரின் எதிர்ப்பை ஏற்ற நிரஞ்சன்குமார், மனைவியிடம் படிக்க வேண்டாம் என கூறினார். ஆனால் நான் தொடர்ந்து படிப்பேன் என்று பவித்ராகூறவே அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார் நிரஞ்சன்குமார்.
என்னுடன் வாழ விரும்பினால் படிப்பை மறந்து விடு, படிப்புதான் முக்கியம் என்றால் என்னை மறந்து விடு என்று கூறிய அவர் கடுமையாகதாக்கியுள்ளார். இதில் பவித்ராவின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது குழந்தையோடு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த பவித்ரா, தனது கணவர் மீது புகார் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பவித்ரா கூறுகையில், எனது கணவர், அவருடைய அப்பா, அம்மா சொல்படிதான் நடக்கிறார். அவர்கள் கூறியதைக்கேட்டு, என்னைப் படிக்க விடாமல் தடுக்கிறார்.
அடிக்கடி அடி, உதைதான். கழுத்தைப் பிடித்தும் நெரித்துள்ளார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கைஇல்லை. அதனால்தான் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார் பவித்ரா.
இந்தப் புகார் குறித்து வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்துமாறு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications