கழுத்தில் தாலியுடன் பாஜக நூதன போராட்டம்
சென்னை:தாலிக்குத் தங்கம் இல்லை, தாளிக்க வெங்காயம் இல்லை என்ற கோஷத்துடன், கழுத்தில் தாலிக் கயிறுகளைக் கட்டிக் கொண்டு பாஜக மகளிர்அணியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று பல்வேறு வகையான கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், நிகழ்ச்சிகள்நடைபெற்றன.
ஆனால் பாஜக மகளிர் அணியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பாஜக மகளிர் அணித் தலைவி லலிதா சுபாஷ் தலைமையில்,சென்னையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கழுத்தில் மஞ்சள் கட்டப்பட்ட தாலிக் கயிறுகளை மாட்டியிருந்தனர். நடு ரோட்டில் விறகு அடுப்பைவைத்து சமைக்கவும் செய்தனர்.
தாலிக்குத் தங்கம் இல்லை, தாளிக்க வெங்காயம் இல்லை, பருப்பு இல்லை, அரிசி இல்லை என்று கோஷமிட்டபடி போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டம் குறித்து லலிதா சுபாஷ் கூறுகையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பின்னர் விலைவாசி விண்ணைத்தொட்டு விட்டது.
தாலிக்குத் தங்கம் வாங்க ஏழைகளால் முடியவில்லை. வெங்காயத்தின் விலையைச் சொல்ல வேண்டாம். அரிசி, பருப்பு, எண்ணை என எல்லா"மவிலை உயர்ந்து விட்டது.
ஒன்று விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலக வேண்டும். அதைவலியுறுத்தித்தான் இந்த நூதனப் போராட்டம் என்றார்.
போராட்டத்தை மாநில பாஜக தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications