உலக மகா பணக்காரர்கள்: 36 பேர் இந்தியர்கள்!கலாநிதி மாறன் சொத்து ரூ. 11,700 கோடி!!
நியூயார்க்:உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 36 மகா கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். சன் டிவி அதிபர் கலாநிதிமாறனுக்கு 349வது இடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ. 11,700 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2007ம் ஆண்டின் மிகப் பெரிய கோடீஸவரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 36 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்தியாவச் சேர்ந்த லட்சுமி மிட்டல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் இதில்குறிப்பிடத்தக்கவர்கள்.
![]() |
மொத்தம் 946 பெரும் பணக்காரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 191 பில்லியன்டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எஃகு நிறுவன தொழிலில் உலகைக் கலக்கி வரும் லட்சுமி மிட்டல், இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 32பில்லியன் டாலராக (அதாவது ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி) தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 14வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 20.1 பில்லியன் டாலராகும் (ரூ. 90 ஆயிரம்கோடி.) அவரது தம்பி அனில் அம்பானி 17.1 பில்லியன் டாலர் சொத்துடன் (ரூ. 80 ஆயிரம் கோடி) 21வது இடத்தில் உள்ளார்.
விப்ரோ நிறுவன அதிபர் ஆசிம் பிரேம்ஜி ரூ. 76 ஆயிரம் கோடி சொத்துடன் 22வது இடத்தில் உள்ளார்.
டிஎல்எப் நிறுவனத்தின் கே.பி.சிங் 10 பில்லியன் டாலர் சொத்துடன் 62வது இடத்தில் உள்ளார். பார்தி டெலிகாம் நிறுவனத்தின் பாரதி மிட்டல் 69வதுஇடத்திலும், குமாரமங்கம் பிர்லா, எஸ்ஸார் நிறுவனத்தின் சசி, ரவி ரூயா ஆகியோர் 86வது இடத்திலும் உள்ளனர்.
சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும் இந்தப் பட்டியலில் உள்ளார். 349வது இடம் கலாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.11,700 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 2 லட்சத்து 50ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து புதிதாக 14 கோடீஸ்வரர்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். சீனாவிலிருந்து 13 பேர் சேர்ந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications