பஸ் பயணிகளிடம் ரூ. 2லட்சம் கொள்ளை
பல்லடம்:கோவை மாவட்டம் பல்லடம் அருகே ஓடும் பஸ்ஸில் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடமிருந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி (28), ரமேஷ் குமார் (32). அங்குள்ள அரிசிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்றுபொள்ளாச்சியில் வசூலான ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் பணத்தோடு ஊருக்கு கிளம்பினர்.
அவர்கள் பயணித்த பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த 2 வாலிபர்கள் திடீரென எழுந்து கையில் உள்ளபணத்தைக் கொடுக்கும்படி கூறி மிரட்டினர்.
இவர்கள் மறுக்கவே, அவர்களில் ஒருவர் தனது கையில் இருந்த துப்பாக்கியால், ஜன்னலுக்கு வெளியே சுட்டுள்ளார். இதனால் பேருந்தில் பரபரப்புஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இன்னொருவர், பணப் பையைப் பறித்துக் கொண்டனர்.
பின்னர் பேருந்து படிக்கட்டுகளில் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு கொள்ளையர்களும்பேருந்தை விட்டு இறங்கி ஓடினர்.
பேருந்தின் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு வேனில் ஏறி அவர்கள் தப்பி விட்டனர். இந்தத் துணிகர கொள்ளை குறித்து பல்லடம்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications