கர்நாடக விவசாயிகளின் ரயில்மறியல் மிரட்டல்
மாண்டியா:கர்நாடகம் வழியாக இயக்கப்படும் தமிழக ரயில்களை மறித்துப் போராட்டம் நடத்தப் போவதாக மாண்டியா மாவட்ட விவசாயிகள் சங்கம்எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் ஆகியமாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்று மாண்டியாவில் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணியும், சாலை மறியலும் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் இதில்கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது.
நடுவர் மன்றத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும். கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும். அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகம்வழியாக தமிழகத்திற்கு இயக்கப்படும் ரயில்களை மறித்துப் போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் பாராட்டத்தில் மைசூர், சாம்ராஜ்நகர் விவசாயிகளும், மாநிலத்தின் அனைத்து விவசாய அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன என்றுதெரிவித்தனர்.
தமிழக ரயில்களை மறிக்கப் போவதாக கர்நாடக விவசாயிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டம் ஏற்புக்குரியதல்ல, இதை இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாது என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாண்டியா விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டம் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications