வெஸ்ட் இண்டீஸை வெளுத்த இந்தியா
ஜமைக்கா:ஜமைக்காவில் நடந்த 2வது பயிற்சி ஆட்டத்தில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 85 ரன்களில் சுருட்டியது இந்தியா. பதான், முனாப் படேல்,ராபின் உத்தப்பா, திணேஷ் கார்த்திக் ஆகியோரின் ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கிடையிலான பயிற்சி ஆட்டங்கள் நடந்தன. இதில் முதல் ஆட்டத்தில்நெதர்லாந்து அணியை இந்தியா எளிதில் வீழ்த்தியது. 2வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகளை சந்தித்தது.
முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியை இந்தியப் பந்து வீச்சாளர்களும், பீல்டர்களும் ரன் எடுக்க விடாமல் திணறடித்தனர்.
முனாப் படேல், அகர்கர், பதான் ஆகியோரின் பந்துகளை சமாளிக்க முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகளின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.அதிகபட்சமாக லாரா 22 ரன்களை எடுத்தார். சர்வான் 13 ரன்களை சேர்த்தார். மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
இறுதியில் 25.5 ஓவர்களிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாககாட்சி அளித்தது.
முனாப் படேல் 4 விக்கெட்டுகளையும், பதான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அகர்கர், ஜாகிர்கான், கும்ப்ளே ஆகியோருக்கு தலா 1 விக்கெட்கிடைத்தது.
பின்னர் இந்திய அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. வழக்கம் போல வீரேந்திர ஷேவாக் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகிவெளியேறினார். ஆனால் மற்றொரு ஓப்பனரான ராபின் உத்தப்பாவும், திணேஷ் கார்த்திக்கும் இணைந்து அசத்தலாக ஆடினர்.
படு ஜாலியாக ஆடிய இருவரும் வெற்றிக்குத் தேவையான ரன்களை 18.3 ஓவர்களிலேயே எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். உத்தப்பா35 ரன்களும், கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர். நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு, பேட்டிங் (ஷேவாக்கைத் தவிர), பீல்டிங்ஆகியவை படு அற்புதமாக இருந்தது.
இந்த வெற்றி மிக முக்கியமானது, மிகவும் சந்தோஷமாவும், திருப்தியாகவும் உணர்கிறோம் என கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications