சென்னையைக் குலுக்கிய திமுக மகளிர் பேரணி
சென்னை:மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மகளிர் அணி சார்பில்சென்னையில் பிரமாண்டப் பேரணி நடைபெற்றது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் சமீபத்தில் திமுக மகளிர் அணி சார்பில் பிரமாண்டப் பேரணிகள்நடைபெற்றன. சென்னையில் மாநகராட்சி மறு தேர்தல் காரணமாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று சென்னையில் மகளிர் அணி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. மன்ரோ சிலையில் தொடங்கிய பேரணி சேப்பாக்கம்விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது.
பேரணியில் அமைச்சர்கள் பூங்கோதை, தமிழரசி, கவிஞர் கனிமொழி, இந்திரகுமாரி, சற்குணபாண்டியன், மகளிர் அணிச் செயலாளர் சங்கரிநாராயணன் உள்ளிட்டோர் நடந்து வந்தனர்.
திமுக கொடிகளுடன் திமுக மகளிர் அணியினர் அணிவகுத்து வந்தனர். இந்த பேரணியை, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகேஅமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் இருந்தபடி முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,மு.க.ஸ்டாலின் உளிளிட்டோரும் பார்வையிட்டனர்.
ஊர்வலத்தில் வந்த மகளிர் அணியினரின் உடைகள் வித்தியாசமாக இருந்தன. ஒவ்வொரு பகுதி மகளிர் அணியினருக்கும் ஒரு வண்ணத்தில் சேலை,ஜாக்கெட் என பிரிக்கப்பட்டிருந்ததால், விதம் விதமான வண்ணங்களில் உடை அணிந்து பெண்கள் அணிவகுத்து வந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை முதல்வர் கருணாநிதி சுமார் 2 மணி நேரம் அமர்ந்து பார்வையிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications