இலங்கை கடற்படை மீண்டும் வெறியாட்டம்: பாம்பன் மீனவர் பலி - 4 பேர் படுகாயம்
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் நடத்திய மற்றும் ஒரு வெறித் தாக்குதலில் பாம்பன் மீனவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
சமீபத்தில் நாகை மீனவர் கலியபெருமாள் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிவலிங்கம் என்ற மீனவரை இதுவரைக் காணவில்லை.அவரும் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் கடும் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்பாம்பனைச் சேர்ந்த ஒரு மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பாம்பன், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள்மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து அவர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் பாம்பனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் குண்டு பாய்ந்துபரிதாபமாக பலியானார். மேலும் 4 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications