பின் லேடன் 50: ஆதரவாளர்கள் பிரார்த்தனை
ஸ்பின் போல்டாக் (ஆப்கானிஸ்தான்):அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின் லேடனின் 50வது பிறந்த நாளையொட்டி தலிபான் தீவிரவாதிகளும், லேடனின் ஆதரவாளர்களும்பிரார்த்தனை செய்து பின்லேடனின் நலனுக்காக இறைவனைப் பிரார்த்தித்தனர்.
அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் அல் கொய்தா அமைப்பை உருவாக்கியவர் பின் லேடன். 1957ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிசவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான ஜெட்டாவில் பிறந்தார் பின்லேடன்.
அல்கொய்தா அமைப்பை உருவாக்கிய பின்லேடன் ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். 2001ம் ஆண்டு செப்டம்பர்11ம் தேதி அமெரிக்காவில் நடந்த பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான் ஆட்சியை அமெரிக்கப்படைகள் அகற்றின.
இதைத் தொடர்ந்து பின்லேடன் தலைமறைவாகி விட்டார். அவ்வப்போது வீடியோ டேப் மூலம் வெளியுலகில் நடமாடி வந்தார் பின் லடன்.அவரைப் பிடிக்க அமெரிக்கா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டன.
இந்த நிலையில் சமீப காலமாக பின்லேடனிடமிருந்து எந்த சப்தமும் இல்லை. கடைசியாக அவர் வீடியோ மூலம் காட்சி தந்தது 2004ம் ஆண்டுதான்.அதன் பிறகும் சில வீடியோக்கள் வெளியாகின. ஆனால் அவையெல்லாம் பழைய கிளிப்பிங்குகள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவ்வப்போதுஆடியோ கேசட்டுகள் வெளியாகும்.
பின்லேடன் என் ஆனார், எங்கு இருக்கிறார் என்பது குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டதால் அவர் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது.பின்லேடன் இறந்து விட்டதாக சிலரும், இல்லை ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருக்கிறார் என சிலரும் கூறி வருவதால் பின் லேடன்குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று அவரது 50வது பிறந்த நாளை பின்லேடனின் ஆதரவாளர்கள் பிரார்த்தனைகள், வழிபாடுகளுடன் கொண்டாடினர்.இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முல்லா ஹயத்துல்லா கான் கூறுகையில், பின் லேடன் உயிருடன்தான் இருக்கிறார். 100சதவீதம் இதை நாங்கள் நம்புகிறோம்.
தலிபான் அமைப்பின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து பின் லேடனுடன் தொடர்பு வைத்துள்ளனர்.
பின்லேடனின் பிறந்தநாளையொட்டி இன்று காலை தலிபான் வீரர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அனைத்து தலிபான்முகாம்களிலும் பிரார்த்தனைகள் நடந்தன.
பின்லேடன் மிகப் பெரிய தியாகி, வீரர். அல்லாவின் தூய தொண்டன். அல்லா அவருக்கு 200 ஆண்டு காலம் வாழும் பாக்கியத்தை அளிக்கவேண்டும் என்றார் ஹயத்துல்லா கான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications