பெரியார் பாடலை எதிர்த்து வழக்கு
சீதையையும், ராமரையும் அவமதிக்கும் வகையில், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பெரியார் படத்தில் வைரமுத்து எழுதியுள்ளபாடலை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ரூ. 95 லட்சம் நிதியுதவியுடன், சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி நடிப்பில், ஞானராஜசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்பெரியார். தந்தை பெரியாரின் வாழ்க்கைக் கதையை விவரிக்கும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை எதிர்த்து தற்போது வழக்குதொடரப்பட்டுள்ளது.இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிறந்த படங்களைஎடுக்க அரசு ஊக்குவிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ. 95 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
ஆனால் பெரியார் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பகவான் என்று தொடங்கும் பாடல், இதிகாசங்களும், புராணங்களும் பொய்யானவைஎன்பதுபோல சித்தரித்து வரிகள் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்திற்கு, அணிலுக்கு முதுகில் ராமர் போட்ட 3 கோடு இருக்கிறது, சீதைக்கு ஏன் இல்லை என்று ஒரு வரி வருகிறது. இதேபோல 9 வரிகள்அமைந்துள்ளன.
இந்த வரிகள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எனவே இப்படத்தை வெளியிடும் முன்சில அறிஞர்களை வைத்து இந்தப் படத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பகவான் பாடலில் இடம்பெற்றுள்ள 9 வரிகளையும்நீக்க வேண்டும். அதன் பிறகே படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச், விசாரணையை 21ம் தேதிக்கு ஒத்திவைத்துஉத்தரவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications